தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்திகளில் ஒன்றில், ‘பார்க்கிங்’ படத் தயாரிப்பாளர் சினீஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ‘நிஞ்சா’ (Ninja) குறித்து முக்கிய மாற்றம் நிகழந்துள்ளது. இப்படத்தை ‘டோரா’ படத்தின் இயக்குநர் முருகு இயக்கவுள்ளார்.
முன்னதாக, பிரபல யூடியூபர் ஃபைனலி பரத் (Finally Bharath) என்பவரை நாயகனாகக் கொண்டு இப்படத்தின் பூஜை மற்றும் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. அப்பொழுது அவருக்கு சுமார் ₹35 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவரது முந்தைய படமான ‘மிஸ்டர் பரத்’ (Mr. Bharath) திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி உரிமைகள் மூலம் சுமார் ₹25 கோடி வரை வணிக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சூழலில், பரத் தனது சம்பளத்தை திடீரென ₹15 கோடியாக உயர்த்திக் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பள உயர்வு குறித்த இந்த முரண்பாடு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, தயாரிப்பாளர் தரப்பு பரத்தை இப்படத்திலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது அவருக்குப் பதிலாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்தின் முன்னணி நாயகனாக அதிகாரப்பூர்வமாக களமிறக்கப்பட்டுள்ளார்.













