கோலிவுட் திரையுலகில் சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (VishwanathAndSons) திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேக பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்குப் பெரிய விருந்தளித்துள்ளது.
View this post on Instagram
வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெங்கட் அட்லூரி இப்படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இசைக்கும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள பிறந்தநாள் போஸ்டருடன் சேர்த்து படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 14, 2026 அன்று பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூர்யாவின் ரசிகர்களும் குடும்ப ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு தரமான விருந்தாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













