---Advertisement---

இந்த குசும்பு போகாதா? அழும்போதும் மனைவியை கலாய்க்கும் சாண்டி… (வீடியோ)

By Sri
Published on: October 4, 2019
sandy
---Advertisement---

பிக்பாஸ் வீட்டில் நடன இயக்குனர் சாண்டி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்களை குஷிபடுத்தும் விதமாக தினமும் புதிய விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.இன்று தர்ஷனும், கவினும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களை கண்டதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைவதும், லாஸ்லியா கவினை காதலுடன் பார்க்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தது.

அதேபோல், வீடியோ கால் மூலம் தன் தந்தையுடன் பேசும் லாஸ்லியா, அப்பா என்னை தவறாக நினைக்காதீர்கள். நான் வெளியே வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன் என அவர் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.மேலும், அப்போது அவர் கதறி அழும் புரமோ வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், தற்போது சாண்டி தனது மனைவி மற்றும் மகளுடன் வீடியோ காலில் பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது ‘உங்களை நினைத்து ப்ரௌவ்டாக (proud – பெருமை) என அவரின் மனைவி கூற ‘என்னது பவுடர் போட்டுக்கிட்டு இருக்கீங்களா?’ என கிண்டலடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள், சோகமாக அழும் மனநிலையிலும், மற்றவர்களை சிரிக்க வைக்கும் குணம் சாண்டிக்கு மட்டுமே உண்டு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.