---Advertisement---

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Published on: June 4, 2026
Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.
---Advertisement---

இப்போதெல்லாம் சினிமா உலகம் அப்படியே தலைகீழா மாறிடுச்சு பாஸ்! முன்னாடி மாதிரி பெரிய மாஸ் ஹீரோக்கள் படம்னாலே கண்ணை மூடிக்கிட்டு தியேட்டருக்கு ஓடுற காலம் மலையேறிப்போச்சு. இப்போ ட்ரெண்டே வேற. இதைப் பத்தி தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கேஜேஆர் ராஜேஷ் (KJR Rajesh) ரீசண்டா கொடுத்த பேட்டி ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் அப்படியே அதிர வச்சிருக்கு. பெரிய ஹீரோக்களோட சம்பள விவகாரம், புதுசா உருவெடுக்குற ஜென் ஜி (Gen Z) பசங்களோட பவர்னு மனுஷன் வெளுத்து வாங்கியிருக்காரு.

அவர் சொன்ன முதல் மேட்டரே நம்ம தளபதி விஜய்யோட தவேக (TVK) கட்சி பத்திதான். விஜய் சாரோட அரசியல் கட்சி இந்த அளவுக்கு அசுரத்தனமா ஜெய்ச்சதுக்கு பின்னாடி இந்த ஜென் ஜி பசங்களோட கூட்டம் தான் மாஸ் காட்டியிருக்குனு சொல்லியிருக்காரு. அதே மாதிரி சினிமாவுலயும் இப்போ பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan), பாட்டுல சாய் அபியங்கர் (Sai Abhyankar) மாதிரி புதுப்புது ஐகான்கள் உருவாகுறதுக்கு இந்த எங்ஸ்டர்ஸ் தான் முக்கியக் காரணம். ரீசண்டா வந்த ‘அப்செஷன்’ (Obsession) படம் வேற லெவல்ல ஹிட் அடிச்சதுக்கும் இந்த ஜென் ஜி பசங்களோட சப்போர்ட் தான் பின்னணியில் இருந்திருக்கு.

Official movie poster of Suriya's Karuppu film announcing the audio launch event in Madurai and third single release.
மதுரையில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள சூர்யாவின் ‘கருப்பு’ பட ஆடியோ வெளியீட்டு விழா.

இதை வச்சு பெரிய ஹீரோக்களுக்கு செம டோஸ் கொடுத்திருக்காரு ராஜேஷ். “பெரிய ஸ்டார்ஸ்லாம் இன்னும் ஏகப்பட்ட சம்பளத்தை கேட்டுட்டு வீட்லதான் உட்கார்ந்திருக்காங்க. அவங்க மட்டும் ப்ராஃபிட் ஷேரிங் (Profit Sharing) முறைக்கு வரலனா, சீக்கிரமே இந்த புது வரவுகள் அவங்கள டோட்டலா ரீப்ளேஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க” என ஓப்பனா வார்னிங் கொடுத்திருக்காரு. முன்னாடிலாம் ஹீரோக்களோட ஈகோவை திருப்திப்படுத்தவே தயாரிப்பாளர்கள் நஷ்டம் வந்தாலும் பொய் கலெக்ஷன் ரிப்போர்ட்டை ஏத்திப் போடுவாங்க, தெலுங்கு தயாரிப்பாளர்களும் ப்ராஜெக்ட்டை பிடிக்க சம்பளத்தை வாரி இறைப்பாங்க, ஆனா இப்போ அந்த பருப்பு வேகவே வேகாதுனு பொரிஞ்சு தள்ளியிருக்காரு.

அதுக்கு செம உதாரணமா இப்போ தியேட்டர்ல ஓடிட்டு இருக்குற ‘பிளாஸ்ட்’ (Blast) படத்தை சொல்லியிருக்காரு. ரிலீஸான சில நாட்களிலேயே இந்த படத்தோட வசூல் 5 மடங்கு (5x gross) எகிறியிருக்கு. கடந்த 5 வருஷத்துல ஒரு சின்ன படம் கூட தாறுமாறான கலெக்ஷனை அள்ள முடியுது, ஸ்டார்டம்ங்கிற விஷயம் இப்போ ரொம்பவே குறைஞ்சு போச்சு. ‘பிளாஸ்ட்’ படத்துல இருக்குற சண்டை காட்சிகளைப் பத்திதான் இப்போ ஊரே பேசிட்டு இருக்கு. ஏன்னா, பெரிய ஹீரோவுக்கு தர்ற சம்பளத்தை மிச்சம் பிடிச்சு, அந்த காசை மொத்தமா புரொடக்ஷன்ல (Production Value) இறக்கியிருக்காங்க. இதுவே ஒரு பெரிய ஸ்டார் இருந்தா கண்டிப்பா சாத்தியமே இல்லை பாஸ்!

கடைசியா ஒரு கில்லாடி பிளானையும் உடைச்சிருக்காரு. இந்த ‘பிளாஸ்ட்’ படம் மட்டும் ‘கருப்பு’ (Karuppu) படத்தோட சேர்ந்து ரிலீஸாகியிருந்தா இந்த அளவுக்கு ஓடியிருக்காது. ஆனா மேக்கர்ஸ் ரொம்ப புத்திசாலித்தனமா ‘கருப்பு’ ரிலீஸாகி 3 வாரம் கேப் விட்டு இந்த படத்தை இறக்குனாங்க. அந்த 3 வார கேப் தான் இப்போ இந்த படத்தோட அசுர வேட்டைக்கு அஸ்திவாரமா அமைஞ்சிருக்குனு கேஜேஆர் ராஜேஷ் செம எதார்த்தமா பேசி முடிச்சிருக்காரு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!

Tamil actor and director Parthiban presenting a special handwritten poem letter to Tamil Nadu CM Vijay during their recent official meeting

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பார்த்திபன் காகிதத்தில் எழுதிய அந்த வார்த்தைகள் என்ன தெரியுமா?