லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படம் பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகில் திரைப்படத்திற்கு பின் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்க்கு 64வது திரைப்படமாகும்.
இந்நிலையில், இப்படம் பற்றி பல முக்கிய தகவல்கள் உங்களுக்காக இதோ!
இப்படத்தில் கலைந்த தலை முடி, கசங்கிய சட்டையுன் வரும் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும், நடிகர் சாந்தனு, பேட்ட படத்தில் நடித்த நடிகை மாளவிகா மேனன் மற்றும் பிரபல மலையாள நடிகர் அந்தோனி வர்கீஸ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இப்படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி.ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
குறிப்பாக இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் 2020ம் ஆண்டின் கோடை விடுமுறையின் போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.









