---Advertisement---

மிருணால் தாகூர் அவுட்? ராக்ஸ்டார் DSP ஜோடியாக கமிட்டாகும் ‘பிரேமலு’ பியூட்டி; செம சர்ப்ரைஸ் அப்டேட்!

Published on: May 27, 2026
Actress Mamitha Baiju in talks to play the female lead opposite music director Devi Sri Prasad in the upcoming movie Yellamma.
---Advertisement---

தென்னிந்திய திரையுலகில் ‘பிரேமலு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அப்புறம் ஒட்டுமொத்த 2K கிட்ஸ் மற்றும் இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷ்ஷாக வலம் வருபவர் தான் மலையாள வரவான நடிகை மமிதா பைஜு (Mamitha Baiju).

தமிழில் ஜி.வி. பிரகாஷின் ‘ரெபல்’, மற்றும்  டூட், கர, ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போன்ற படங்கள் மூலம் கோலிவுட்டிலும் நல்ல மார்க்கெட்டை பிடித்துள்ள இவருக்கு, தற்பொழுது டோலிவுட்டின் ஒரு பிரம்மாண்ட பேன்-இந்தியா ப்ராஜெக்ட்டில் ஆச்சரியப்படும்படியான ஒரு மெகா சர்ப்ரைஸ் வாய்ப்பு தேடி வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள்ல பேசப்பட்டு வருது.

‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad – DSP) முதன்முறையாகப் பக்கா ஃபோல்க் ஆக்ஷன் கதையில் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ (Yellamma) திரைப்படத்தில், கதாநாயகியாக நடிக்க வைக்க தற்பொழுது மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனர்ல தில் ராஜு தயாரிப்பில், ‘பலங்கம்’ (Balagam) பட புகழ் இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கும் இந்த கிராமத்து ஆக்ஷன் டிராமாவுக்கு ஏற்கனவே சோசியல் மீடியாவுல பெரிய ஹைப் இருக்கு. இந்த நிலையில தான், படத்தின் மோஸ்ட் வான்டெட் ஹீரோயின் கேரக்டருக்கு மமிதா பைஜுவை லாக் செய்ய படக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வர்றாங்க.

Music director Rockstar Devi Sri Prasad announcing his acting debut in the upcoming Pan-India movie Yellamma.
ஹீரோவாக மாறும் ராக்ஸ்டார்: ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக களம் இறங்கும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்!

உண்மையில், இந்த ‘எல்லம்மா’ படத்தின் மெயின் லீட் ரோலிற்காக ஆரம்பத்தில் ‘சீதா ராமம்’ புகழ் நடிகை மிருணால் தாகூரைத் தான் (Mrunal Thakur) படக்குழுவினர் அணுகியிருந்தனர். மிருணால் தாகூரும் இந்த கதையைக் கேட்டு நடிக்க ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது சில கால்ஷீட் குளறுபடிகள் மற்றும் பிற கமிட்மென்ட்கள் காரணமாக இந்த ரேஸிலிருந்து அவர் தற்காலிகமாக விலகியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்தே, இந்த கேரக்டருக்கு மமிதா பைஜு சரியாக இருப்பார் என இயக்குநர் வேணு முடிவு செய்து, அவரிடம் தற்பொழுது கதையைக் கூறி அட்வான்ஸ் லெவல் டிஸ்கஷன் போயிட்டு இருக்குன்னு இன்சைடர் டாக்ஸ் வெளியாகி இருக்கு.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் எனர்ஜிக்கு இணையாக நம்ம ‘பிரேமலு’ பியூட்டி மமிதா பைஜுவும் சேர்ந்தால் தியேட்டர்ல டான்ஸ் மற்றும் ஆக்ஷன் சீன்கள் வேற லெவல்ல கலகலப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் கிராமத்து ஜாதரா அனௌன்ஸ்மென்ட் வீடியோக்கள் இணையத்தைக் கலக்கிய வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!