---Advertisement---

JioHotstar’s Next Crime Thriller Lingam! — “விலங்கு டீம்ல இருந்து அடுத்த தரமான சம்பவம்!” — கதிரின் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் ரிலீஸ் அப்டேட்; ஜியோஹார்ட்ஸ்டாரில் வெறித்தனமான ஆட்டம் ஆரம்பம்!

Published on: May 22, 2026
Actor Kathir in a rugged gangster avatar for the official promo poster of Hotstar Specials Lingam web series on JioHotstar.
---Advertisement---

கோலிவுட்டின் எதார்த்தமான நடிப்புக்குப் பெயர் போன நடிகர் கதிர் (Kathir) மற்றும் ‘பேச்சிலர்’ படம் மூலம் இளைஞர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த திவ்யபாரதி (Divyabharathi) கூட்டணியில் உருவாகியுள்ள புதிய க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் தான் ‘லிங்கம்’ (Lingam). ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் ‘விலங்கு’ சீரிஸை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைத் தேடித்தந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prasanth Pandiyaraj), இந்த ‘லிங்கம்’ சீரிஸை பிரம்மாண்டமாகப் பிரசன்ட் செய்துள்ளார். இந்த நிலையில், இந்த சீரிஸின் வெறித்தனமான ஓடிடி ரிலீஸ் ப்ரோமோஷன் வேலைகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.

“களம் ரெடி.. இறங்கி ஆடலாமா” என்கிற செம மாஸான கேப்ஷனுடன், இந்த புதிய வெப் சீரிஸ் விரைவில் ‘ஜியோஹார்ட்ஸ்டார்’ (JioHotstar) ஓடிடி தளத்தில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆக உள்ளதாகப் படக்குழுவினர் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி பகுதியில் வாழ்ந்த ஒரு நிஜ வாழ்க்கை கேங்க்ஸ்டரின் (Real-life gangster) கதையை மையமாக வைத்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக லட்சுமி சரவணக்குமார் (Lakshmi Saravanakumar) இந்த சீரிஸை இயக்கியுள்ளார். ஒரு கபாடி வீரனாக இருக்கும் ஹீரோ, தான் செய்யாத குற்றத்திற்காக எப்படிப் பழிவாங்கப்பட்டு, பின்னர் யாரும் அண்ட முடியாத ஒரு மிகப்பெரிய தாதாவாக மாறுகிறான் என்பதுதான் இந்த சீரிஸின் ஒன்லைன் கதையாம்.

இந்த சீரிஸில் கதிருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்க, இவர்களுடன் இணைந்து போஸ் வெங்கட் (Bose Venkat), பூர்ணிமா ரவி (Poornima Ravi) மற்றும் லச்சு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கோபி பிரசன்னா (Gopi Prasanna) தனது அசாத்திய ஸ்டைலில் போஸ்டர் டிசைன்களை செய்துள்ளார். தற்பொழுது ரிலீஸாகியுள்ள இந்த “லிங்கம் கமிங் சூன்” போஸ்டரில் கதிரின் அந்த ரக்கடான லுக் மற்றும் ‘ரவுடி லிங்கம்’ கெட்டப் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து உருவான இந்த ‘ஜியோஹார்ட்ஸ்டார்’ (JioHotstar) ஓடிடி தளத்துல, தமிழ்ல வெளியாகப்போற ஒரு மிக முக்கியமான மாஸ் ஒரிஜினல் மெகா சீரிஸா இந்த ‘லிங்கம்’ அமையப் போகுது. இதனாலேயே இந்த சீரிஸ் மீது ஓடிடி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது பயங்கர எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜியோஹார்ட்ஸ்டார் தமிழ் (JioHotstar Tamil) அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியாகியுள்ள இந்த மாஸ் அப்டேட், தற்பொழுது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செம ஸ்பீடா ட்ரெண்டாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சீரிஸின் வெறித்தனமான ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster of Chutney Sambar series featuring Yogi Babu and Vani Bhojan.

தியேட்டர், ஓடிடியை விட டிவில பாத்தா தனி சுகம்! ஞாயிறு மதியம் விஜய் டிவியில் அதிரடி ரிலீஸாகும் ‘சட்னி சாம்பார்’!

Official Netflix poster for the Singeetham Srinivasa Rao film Sing Geetham.

40 ஆண்டுக்காலக் காத்திருப்பு! 94 வயதில் மாயம் செய்த சிங்கீதம் சீனிவாச ராவின் ‘சிங் கீதம்’ நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ்!

Deepa Balu sharing a cryptic goodbye message regarding the Heart Beat series on social media.

இதுதான் அந்த அதிர்ச்சி முடிவு? ‘Heart Beat’ சீசன் 3-லிருந்து விலகுகிறாரா ரீனா தீபா பாலு? வைரலாகும் உருக்கமான பதிவு!

Weekly OTT releases consolidated banner featuring latest movies and series from Netflix, JioHotstar, Zee5 and Prime Video.

மக்களே நோட் பண்ணுங்க! இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் மெகா லிஸ்ட் இதோ.. நெட்ஃபிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 தளங்களில் வெளியாகும் மிரட்டலான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் அப்டேட்ஸ்!

Official announcement poster of Hotstar Specials Second Love series starring Ramya Krishnan and Mirnalini Ravi on JioHotstar.

“வாழ்க்கையில இன்னொரு காதல் கதை!”.. ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் ரம்யா கிருஷ்ணனின் ‘செகண்ட் லவ்’.. அதிகாரப்பூர்வ மாஸ் அறிவிப்பு!

Action King Arjun Sarja intense martial arts pose from his blockbuster movie Blast releasing officially on Netflix OTT platform.

“தியேட்டர்ல தப்பவிட்டவங்க ரெடியா இருங்க!”.. அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அவுட்!