---Advertisement---

Suriya Secret Gift: படம் சுமாரானாலும் கார் கொடுத்த சூர்யா – அனிருத் ஹீரோவாக வேண்டிய படம் எது தெரியுமா?

Published on: April 5, 2026
Actor Suriya gifting a car to director Vignesh Shivan and insights on Anirudh's missed acting debut.
---Advertisement---

தமிழ் சினிமாவுல ஒரு படம் ஹிட் அடிச்சா அந்த டீமுக்கு கார், பைக்னு கிப்ட் கொடுக்குறது வழக்கமான விஷயம் தான். ஆனா ஒரு படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடலனாலும், அந்த இயக்குனரோட உழைப்பை பாராட்டி கார் கொடுத்த ஒருத்தர் இருக்காருன்னா அது நம்ம சூர்யா சார் தான். ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலீஸ் ஆகி மிக்ஸட் ரிவியூஸ் வந்தப்போ கூட, விக்னேஷ் சிவனுக்கு ஒரு சொகுசு காரை சூர்யா கிப்ட் பண்ணி அசத்தி இருக்காரு. அந்த ஒரு நிமிஷம் தான் சூர்யா சாரோட நிஜமான கேரக்டர் என்னன்னு எனக்கு புரிஞ்சுதுன்னு விக்கி இப்போ உருக்கமா சொல்லி இருக்காரு.

நீ ரொம்ப சின்சியரா ஒர்க் பண்ண விக்கி, எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி தான் அந்த காரை சூர்யா கொடுத்திருக்காரு. ஆனா அந்த காரை வாங்கிக்கிட்ட விக்கி ஒரு மாஸான பதிலையும் அங்க சொல்லி இருக்காரு. “இந்த கார் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக இல்ல சார், ஃியூச்சர்ல நான் உங்களுக்கு பண்ணப்போற ஒரு தரமான ஹிட் படத்துக்கான அட்வான்ஸா இதை நான் எடுத்துக்குறேன்” அப்படின்னு விக்கி சொன்ன அந்த வார்த்தை இப்போ கோலிவுட்ல பயங்கர ஹைப் ஏத்திருக்கு.

சூர்யா சாரோட இந்த பெருந்தன்மைக்கு பின்னாடி இன்னொரு வெயிட்டான சம்பவமும் இருக்கு. ஒருமுறை விக்கி அவரோட அசிஸ்டண்ட் டைரக்டர் ஒருத்தருக்கு இருக்குற கஷ்டத்தை பத்தி போன்ல பேசிட்டு இருந்தப்போ, சூர்யா சார் அங்க இருந்திருக்காரு. எதையுமே கேட்காம, தானாவே வந்து அந்த அசிஸ்டண்ட்டுக்கு பண உதவி பண்ணி உதவி இருக்காரு. இந்த மாதிரி ஒரு நல்ல மனுஷனை பார்க்குறது ரொம்ப அபூர்வம்னு விக்கி நெகிழ்ந்து போயி சொல்லி இருக்காரு.

இது ஒரு பக்கம் இருக்க, ராக்ஸ்டார் அனிருத் பத்தி விக்கி சொன்ன ஒரு விஷயம் தான் இப்போ சோஷியல் மீடியால செம்ம ட்ரெண்டிங். ‘நானும் ரவுடி தான்’ படத்தோட கதையை விக்கி நிறைய ஹீரோக்கள் கிட்ட சொன்னப்போ யாருமே ஓகே பண்ணலையாம். அப்போ அனிருத் தான் “வேணும்னா நானே ஹீரோவா நடிக்கவா?” அப்படின்னு கேட்டுருக்காரு. உடனே போட்டோஷூட் எல்லாம் முடிஞ்சு அனிருத் ஹீரோவா நடிக்கிறது கிட்டத்தட்ட கன்பார்ம் ஆகிடுச்சு.

Actors Suriya and Jyothika attending the grand wedding of director Vignesh Shivan and actress Nayanthara.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் நேரில் வந்து வாழ்த்திய நட்சத்திர தம்பதி சூர்யா மற்றும் ஜோதிகா.

ஆனா அந்த நேரத்துல வந்த ஒரு படம் தான் அனிருத்தோட முடிவை மாத்திருக்கு. ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகி அனிருத்தோட மியூசிக் உலக அளவுல ஹிட் அடிச்சதால, ஒரே நேரத்துல ரெண்டு குதிரைல சவாரி பண்ண வேணாம்னு மியூசிக்ல மட்டும் கவனம் செலுத்த அனிருத் முடிவு பண்ணிட்டாரு. அந்த முடிவு தான் இன்னைக்கு நமக்கு ஒரு குளோபல் மியூசிக் ஐகானை கொடுத்திருக்கு. ஆனா அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் அனிருத் தான் விக்கியோட எல்லா கஷ்ட நஷ்டத்துலயும் கூடவே இருக்குற ஒரு பில்லர்.

விக்னேஷ் சிவனோட லைஃப்ல அனிருத்தோட இம்பாக்ட் ரொம்ப பெருசு. தன் கூடவே இருக்குற பிரண்ட்ஸை எப்போவும் விட்டுக்கொடுக்காத குணம் அனிருத்துக்கு உண்டு. அதே மாதிரி தான் விக்கியும் இப்போ சூர்யா சார் கூட அடுத்த படத்துக்கு ரெடி ஆகிட்டு வர்றாரு. தானா சேர்ந்த கூட்டம் படத்துல மிஸ் பண்ண அந்த பெரிய வெற்றியை இந்த முறை சூர்யா – விக்கி கூட்டணி கண்டிப்பா பிடிக்கும்ன்றதுல எந்த சந்தேகமும் இல்லை.

விக்கி இப்போ இருக்குற அந்த பாசிட்டிவ் மைண்ட்செட் தான் அவரோட பலமே. ஆரம்பத்துல பல கஷ்டங்களை பார்த்தாலும், இப்போ சூர்யா, அனிருத்னு ஒரு பெரிய டீமே அவர் பின்னாடி இருக்கு. ட்ரோல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உண்மையான உழைப்புக்கு எப்போவும் ஒரு மரியாதை உண்டுன்றத சூர்யா கொடுத்த அந்த கார் கிப்ட் மூலமாவே தெரிஞ்சுக்கலாம். சீக்கிரமே சூர்யா – விக்னேஷ் சிவன் கூட்டணியில இருந்து ஒரு மெகா ஹிட் அனவுன்ஸ்மென்ட் வரும்னு எதிர்பார்க்கலாம்.

சூர்யா சார் ஒரு ஜெம் ஆஃப் எ பர்சன் அப்படின்னு விக்கி சொன்னது 100% உண்மை தான். ஒரு இயக்குனரோட உழைப்பை மட்டும் மதிச்சு அங்கீகாரம் கொடுக்குறது பெரிய விஷயம். அனிருத் ஹீரோவா நடிக்கலனாலும் அவரோட பிஜிஎம் இல்லாம விக்கியோட படங்கள் கம்ப்ளீட் ஆகாது. இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான ஃப்ரெண்ட்ஷிப் பாண்டிங் தான் கோலிவுட்டோட பியூட்டி. இப்போ விக்கி ஷேர் பண்ணி இருக்குற இந்த விஷயங்கள் எல்லாமே அப்கமிங் புராஜெக்ட்களுக்கு ஒரு செம்ம எனர்ஜியை கொடுத்திருக்கு.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!

New official flag unveiled by the All India Dhanush Fan Club.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் தனுஷ் ரசிகர்கள்! புதிய கொடியை அறிமுகப்படுத்திய அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம்!