கோலிவுட்ல இப்போ தனுஷ் பேன்ஸ் மத்தியில பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கு ‘கர’ (KARA) படம். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்துல ஒரு கிரிப்பிங்கான ரூரல் ஹீஸ்ட் த்ரில்லரா உருவாகியிருக்கு இந்தப் படம். ஏப்ரல் 30-ம் தேதி இந்தப் படம் சோலோவா ரிலீஸாகப்போகுதுன்னு இப்போ கன்பார்ம் பண்ணிட்டாங்க. படத்தோட ஆடியோ லாஞ்ச் வர்ற ஏப்ரல் 19-ம் தேதி ரொம்ப கிராண்டா நடக்கப்போகுது. தனுஷ் இதுல ‘கரசாமி’ அப்படிங்கிற ஒரு அழுத்தமான கேரக்டர்ல நடிக்கிறாரு.
இன்னொரு பக்கம் நம்ம தனுஷோட 55-வது படமான ‘D55’ அப்டேட் தான் இப்போ சோசியல் மீடியா முழுக்க ட்ரெண்டிங். ‘அமரன்’ படத்துல மெகா ஹிட் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி தான் இதை இயக்குறாரு. இப்போ சென்னையில இருக்குற ஒரு காலேஜ்ல தனுஷ் கலந்துகக்குற முக்கியமான சீன்களை செம ஸ்பீடா எடுத்துட்டு இருக்காங்க. இதுல ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தனுஷ் கூட மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி சேர்ந்து நடிக்கிறது தான் பெரிய ஹைலைட்.

மம்மூட்டி இதுல ஒரு பவர்ஃபுல்லான போலீஸ் ஆபீசர் ரோல்ல நடிக்கிறாராம். ஆனா இது சாதாரண போலீஸ் இல்ல, கொஞ்சம் ‘க்ரே ஷேட்ஸ்’ (Grey-shaded) இருக்குற ஒரு வித்தியாசமான கேரக்டர்னு சொல்றாங்க. மம்மூட்டி – தனுஷ் காம்போவுல வர்ற சீன்கள் எல்லாம் இப்போ வேற லெவல்ல வந்திருக்காம். சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஹீரோயின்களா நடிக்கிற இந்தப் படத்தோட ஷூட்டிங்கை செப்டம்பர் மாசத்துக்குள்ள முடிக்க பிளான் பண்ணிருக்காங்க.
தனுஷ் இப்போ இந்த ஒரு படத்தை முடிச்சுட்டு, செப்டம்பர்ல மாரி செல்வராஜ் கூட தன்னோட அடுத்த படத்தை (D56) ஆரம்பிக்கப்போறாரு. ‘கர’ படத்தோட ட்ரைலருக்காக ரசிகர்கள் இப்போவே வெயிட்டிங்ல இருக்காங்க. ஏப்ரல் 30-ல தனுஷ் ஒரு தரமான சம்பவத்தை செய்வாரான்னு பொறுத்திருந்து பார்ப்போம். தனுஷ் – மம்மூட்டி காம்போ ஸ்கிரீன்ல வரும்போது தியேட்டர்ல விசில் பறக்கும்ங்கிறதுல சந்தேகமே இல்லை.













