---Advertisement---

மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை: உதவி இயக்குநரை அடித்தாரா? நட்டியின் அதிரடி விளக்கம்!

By Sri
Published on: February 6, 2026
மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை குறித்து நடிகர் நட்டி நடராஜ் அளித்துள்ள பேட்டி.
---Advertisement---

மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், அதன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் நடிகர் நட்டி நடராஜ் ஒரு பேட்டியின் போது உதவி இயக்குநர் குறித்துப் பகிர்ந்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.

படப்பிடிப்பில் நடந்த அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி

கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகர் நட்டி, சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கியச் சம்பவத்தை விவரித்தார். படத்தில் ஊர் மக்களைத் தாக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாகவே அடிப்பது போன்ற உணர்வு வர வேண்டும் என்பதற்காக மாரி செல்வராஜ் சில முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது நடிகர் நட்டி, நிஜமாகவே ஒருவரை அடிக்கத் தயக்கம் காட்டியுள்ளார்.

உதவி இயக்குநரை அடிக்கச் சொன்ன மாரி செல்வராஜ்?

நட்டியின் தயக்கத்தைப் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், “இது சும்மா டம்மி ஸ்டிக்தான், வலிக்காது” என்று கூறித் தனது உதவி இயக்குநரை அழைத்து,  அடிஅடின்னு அடித்துவிட்டு, வலி இருக்கானு என்று கேட்டு உள்ளார். அந்த உதவி இயக்குநர்  “வலிக்கவில்லை சார்” என்று பதில் அளித்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இது சூர்யாவின் 'வாய்ஸ் மாஸ்'! 'விஸ்வா அண்ட் சன்ஸ்' படத்திற்காக சூர்யா பாடிய டான்ஸ் நம்பர்.. கென் கருணாஸ் எழுதிய வைரல் வரிகள்!

இருப்பினும், இயக்குநர் அங்கிருந்து சென்ற பிறகு அந்த உதவி இயக்குநர் வலியால் துடித்ததைப் பார்த்த நட்டி அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அந்த உதவி இயக்குநரிடம் கேட்ட போது, “என்ன சார் செய்ய முடியும்? அடி வாங்கும் போது ஒன்று இரண்டு அடிகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாக நட்டி அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

சர்ச்சையும் இயக்குநரின் விளக்கமும்

இந்தச் சம்பவம் மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை என்ற பெயரில் தற்போது மீண்டும் விவாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, மாரி செல்வராஜ் தனது உதவி இயக்குநர்களை அடிப்பதாக உதயநிதி ஸ்டாலின் ஒரு நகைச்சுவையான நேர்காணலில் குறிப்பிட்டதும் சர்ச்சையானது. ஆனால், மாரி செல்வராஜ் இதனை மறுத்துள்ளார். தான் எதார்த்தத்தை திரையில் கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது இந்த மாரி செல்வராஜ் கர்ணன் சர்ச்சை சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்களை ஈர்த்து வருகிறது. ஒரு இயக்குநரின் அர்ப்பணிப்பு எந்த எல்லை வரை இருக்கலாம் என்பது குறித்த விவாதம் இதன் மூலம் தொடங்கியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Suriya and young actor Naslen posing together, representing the luxury watch gift for the movie 'Scene'.

சூர்யாவின் போன் நம்பரைக் கொடுங்க: நஸ்லென் வாங்கிய வாட்சைப் பார்த்து ஜாலியாகக் கலாய்த்த குஞ்சாக்கோ பாபன்!

High-glamour South Indian commercial cinema visual representing Legend Saravanan's upcoming grand entertainer Businessman directed by Thirukumaran.

ட்ரிபிள் கெட்டப்பில் அதிர வைக்க வரும் லெஜண்ட் சரவணன்… அடுத்த பிரம்மாண்ட படத்திற்காக கைகோர்க்கும் பிரபல இயக்குநர் யார் தெரியுமா?

High-energy coastal South Indian action cinema visual representing director Hari and Atharvaa's upcoming film set in Thoothukudi.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் தூத்துக்குடி பின்னணியில் உருவாகும் அதிரடி ஆக்‌ஷன் படம்… ஹரி பட நாயகி ரேஸில் முந்தும் இரண்டு முன்னணி நடிகைகள்!

Mystical South Indian fantasy adventure visual representing Navoria The Game for Life directed by Chimbu Devan and starring Vimal.

தமிழ் சினிமாவின் ‘ஜுமாஞ்சி’யா! ‘நவோரியா – தி கேம் ஃபார் லைஃப்’? விமல், சிம்புதேவன் கூட்டணியின் மிரட்டல் சர்ப்ரைஸ்!

Cinematic editorial visual representing the emotional military biopic Amaran directed by Rajkumar Periyasamy and starring Sivakarthikeyan.

இந்துவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கு மனம் வரவில்லை… ‘அமரன்’ உருவாக்கத்தின் நெகிழ்ச்சிப் பக்கங்களைத் திறந்த இயக்குநர்!

Cinematic editorial concept visual representing Jayam Ravi's upcoming theatrical releases Genie and Karathey Babu.

ஜெயம் ரவியின் ‘ஜீனி’ மற்றும் ‘கராத்தே பாபு’ ரிலீஸ் தேதி அப்டேட்! அடுத்தடுத்து வெளியாகும் பிரம்மாண்டப் படங்கள்!