28 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த், சுந்தர் சி கூட்டணியில் வெளிவந்த படம் அருணாச்சலம். பொதுவாக ரஜினிகாந்த் அந்தக்காலத்தில் இருந்தே அந்த நேரத்தில் புகழ்பெற்ற இயக்குனர்களை தவிர வேறு யாரின் இயக்கத்திலும் அதிகபட்சமாக நடிக்க மாட்டார், இப்போது வரை இதுதான் டிரெண்டிங் என்ற பெயரில் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் , நெல்சன் இவர்களின் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார். இவர்களின் படங்களை இளைய தலைமுறையினர் விரும்புவதே ரஜினி இவர்களின் படங்களில் நடிக்க காரணம், ஆனால் இவர்களின் படங்கள் என்னதான் நன்றாய் இருந்ததாய் சொல்லப்பட்டாலும் ஒரு மெச்சூரிட்டி இல்லாமல்தான் இருந்தது. சும்மா அவ்வளவு நாள் ஓடிச்சு, இவ்வளவு நாள் ஓடிச்சு என அதிகம் மக்கள் விரும்பாத புள்ளி விவரங்களைத்தான் ரசிகர்கள் திணித்தனர்.
உண்மையில் சொல்லப்போனால் சந்திரமுகி, அதற்குபின் வந்த சிவாஜி படங்களுக்கு பின்பு கமர்சியலான மாஸ் படத்தை ரஜினியிடம் இருந்து மக்கள் பெறவே இல்லை என்பதுதான் உண்மை. இப்போ 28 வருசத்துக்கு பிறகு ஒரு மூத்த கமர்சியல் இயக்குனரான சுந்தர் சியுடன் ரஜினிகாந்த் கை கோர்த்திருப்பதால் ஒரு குரு சிஷ்யன் ரேஞ்சுல, ஒரு சந்திரமுகி ரேஞ்சுல கலகலப்பும் விறுவிறுப்பும் கலந்த படமாய் இது இருக்கும் என நம்புவோம். அப்போ இருந்த சிறந்த காமெடி நடிகர்கள் எல்லாம் இப்போ யாருமே சுத்தமாக இல்லாத நிலையில் வடிவேலு போன்றோரை களமிறக்கினால் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த மன நிறைவு கிடைக்கும் என நம்புகிறேன்.
சுந்தர் சி கடவுள், பேய், அமானுஷ்யம் அதில் கொஞ்சம் ஹீரோயிசம் என கலந்து அதில் முக்கால்வாசி காமெடியை கலக்கிவிட்டு படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவதில் வல்லவர். அது போல் சத்யராஜ், சிவகார்த்திகேயன் போன்றோரை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனருக்கு பயன்படுத்தி ஹீரோவாக்கி படம் எடுத்த கமல் தனது 40 ஆண்டு கால நண்பர் ரஜினியை வைத்து முதல்முறையாக இப்படத்தை தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகுந்த விசயம்.
சுந்தர் சி கிட்ட பொறுப்பை கொடுத்துட்டிங்கள்ல இனி அவர் பார்த்துக்கொள்வார் என உறுதியாக நம்பலாம். படமும் உறுதியாக வெற்றிபெறும் என நம்பலாம். அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் வரை ரசிகர்கள் அதிக பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பெரிய விசயம்தான்

