இயக்குனர் பாரதி கண்ணன் சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஏ பி நாகராஜன் அவர்கள் வீட்டிற்கு சென்றாராம், அவரது மனைவியிடம் ஆசிர்வாதம் வாங்கினாராம். நம்மை விட பக்தி படங்களின் புகழின் உச்சம் தொட்டவர் என ஏ பி நாகராஜனை புகழ்ந்து சித்ரா லட்சுமணன் அவர்களின் பேட்டியில் பாரதி கண்ணன் கூறி இருந்தார். அங்கு சென்றபோது ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டாராம் அதாவது தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வெளிவந்த போது, அந்தப் படம் 100 நாள் ஓடும் 200 நாள் ஓடும் என எல்லோரும் ஆருடம் கூற, ஏ பி நாகராஜன் கார் டிரைவர் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றி இருந்தால் இன்னும் 100 நாள் எக்ஸ்ட்ரா ஓடும் என சொல்லி இருக்கிறார், அப்படி என்னப்பா கிளைமாக்ஸ் சொல்லு என அந்த கார் டிரைவரிடம் ஏபி நாகராஜன் கேட்க அந்த கிளைமாக்ஸ்ல மாற்றங்களை சொல்லி இருக்கிறார் கார் டிரைவர்.அந்த மாற்றங்கள் ஏபி நாகராஜனுக்கு பிடித்து போனாலும், அதை வைக்க முடியவில்லை காரணம் என்னவென்றால் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அந்த கிளைமாக்ஸ் அவ்வளவு புத்தி கூர்மையாக யோசித்த கிளைமாக்சாம். அந்த கிளைமாக்ஸ் மட்டும் வைத்திருந்தால் இன்னும் நூறு நாள் எக்ஸ்ட்ரா படம் ஓடி இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது பத்மினியை சிவாஜி கணேசன் தன் நாதஸ்வரத்தாலேயே வாசித்து காப்பாற்றுவது போல் ஒரு கிளைமாக்ஸ் சொல்லி இருக்கிறார். அவர் கிளைமாக்ஸ் சொன்ன விதத்தை அவரின் அறிவுக்கூர்மையை கண்டு ஏ பி நாகராஜன் வியந்தாராம். அந்த டிரைவர் வேறு யாருமல்ல பின்னாட்களில் சட்டம் என் கையில் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் டி என் பாலு அவர்கள் தான் என இயக்குனர் பாரதி கண்ணன் கூறியிருந்தார்.

Posted incinema news
