---Advertisement---

ரஜினி பிரபு நடித்து ஒரே ஆண்டிலேயே வெளிவந்த இரு படங்கள்

Published on: October 18, 2025
---Advertisement---
  1. ரஜினிகாந்த்,பிரபு இருவரும் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் என சொல்லலாம்.

 

பெரிய நடிகர் குடும்பமான சிவாஜியின் இளையபிள்ளையாக பிரபு பிறந்து நடித்தாலும் ஆரம்ப காலங்களில் ரஜினி,பிரபு சேர்ந்து நடிக்கவே இல்லை. பிரபு நடிக்க வந்த பிறகு 6 வருட இடைவெளிக்கு பிறகு தான் ரஜினி பிரபு இணைந்து நடித்தனர்.

 

இந்தப் படம் தான் குரு சிஷ்யன். 1988 ல் வெளிவந்தது. இயக்குனர். தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அந்த நேரத்தில் நலிவடைந்து இருந்த நிலையில் பொருளாதாரரீதியாக உதவுவதற்காக ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த படம் இது. பொதுவாக நடிகர் நடிகைக்கு தான் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் என சொல்லுவார்கள் இந்த படத்தில் ரஜினி பிரபுவின் கெமிஸ்ட்ரி மிக அருமையாக இருந்தது. குரு என பிரபு சொல்ல சிஷ்யா என ரஜினி சொல்ல இந்த  படம் கலகலப்பான படமாக இருந்தது.

 

இந்தப் படம் வெளிவந்து சில மாதங்களிலேயே தேவர் பிலிம்ஸ் தயாரித்த தர்மத்தின் தலைவன் திரைப்படம் வெளியானது. தர்மத்தின் தலைவன் திரைப்படம் புகழ்பெற்ற நிறுவனமான தேவர் பிலிம்ஸ் தயாரித்த கடைசி திரைப்படம். இந்தத் திரைப்படத்திலும் பிரபுவும் ரஜினியும் சேர்ந்து நடித்து, தேவர் பிலிம்ஸ் கடைசி படத்தையும் ஹிட்டாக உதவினர். அவ்வளவு நாட்களாக ஒன்று சேர்ந்து நடிக்காத ரஜினியும் பிரபுவும் ஒரே வருடத்தில் ஒன்று சேர்ந்து இரண்டு படங்கள் நடித்தனர்.

 

அதன்பின் சிவாஜி கணேசன் சொந்த பட நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ், மன்னன் சந்திரமுகி படங்களில் ரஜினி பிரபுவும் சேர்ந்து நடித்தனர்.இந்த கெமிஸ்ட்ரி திரையுளவில் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி.

 

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.