கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், டாமினிக் அருண் இயக்கத்தில் ஓணம் திருநாளை ஒட்டி வெளியான, இந்தியாவின் முதன் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான “லோக்கா சாப்டர் ஒன்” என்ற மலையாள திரைப்படம், தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் நாளே 100 கோடி வசூலில் வாரி குவித்தது. சமூக வலைத்தளங்களில், திரை விமர்சகர்களர்களின் ஆதரவையும், வரவேற்பையும் கிடைத்ததால், இந்த படத்தின் சாதனை மென்மேலும் உயர்ந்துள்ளது.
உலக அளவில் இந்த திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூலை எட்டியுள்ளது. இதனை ஒட்டி ஏற்கனவே மலையாளத்தில் வெளியான:
மஞ்சுமல் பாய்ஸ் 242 கோடியையும், எம்பிரான் 268 கோடியையும், துதரும் 235 கோடியையும் வசூலில், முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஆனால், தற்போது துல்கர் சல்மான் தயாரித்த, இந்த படம் உலக அளவில் 200 கோடியை வசூலித்ததை அடுத்து, நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் 200 கோடியை தாண்டி முதலிடத்தில் உள்ள மஞ்சுமல் பாய்ஸ் -சை பின்னுக்கு தள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது
குறிப்பாக, இந்த படம் கேரள நாட்டிற்கே உரிய அதீத சக்தி கொண்ட தெய்வங்களின் வழிபாட்டுகளின் மகத்துவத்தை மையக்கருவாகக் கொண்டு சூப்பர் ஹீரோயின் படமாக திரையிடப்பட்டுள்ளது.







