---Advertisement---

சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!

By Sri
Published on: September 21, 2024
---Advertisement---

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இது நகை பிரியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு 2,200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகளிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்தே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. இது படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை மீண்டும் 54,000 கடந்து விற்பனையாகி வந்தது. தங்கத்தின் விலை கடந்த 16ஆம் தேதி மீண்டும் 55 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சற்று சறுக்களை சந்தித்தது சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டது.

அதன்படி நேற்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 685 ரூபாய்க்கும், ஒரு பவுன் தங்கம் 55,080 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் மீண்டும் இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. ஒரு கிராம் தங்கம் விலை 75 ரூபாய் உயர்ந்து 6960 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராம் இருக்கு 50 காசுகள் உயர்ந்து 98 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.