---Advertisement---

தன்னுடைய திருமணம் எப்போது நடக்கும் யார் காதலர்..? பேட்டியில் ஓப்பனாக கூறிய கங்கனா ரனாவத்…!

By Sri
Published on: August 19, 2024
---Advertisement---

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். பாலிவுட் சினிமாவில் காலம் காலமாக இருந்த ஒரு விஷயத்தை உடைத்து தனது திறமையால் முன்னணி நடிகையாக முன்னேறியவர். மூன்று கான்களுடன் நடித்தால் மட்டுமே பிரபலமாக முடியும் என்பது தவறு என்று செய்து காட்டியவர்.

இவர் சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகளை கிடையாது. சொந்த வாழ்க்கையிலும் பல சவால்களை சந்தித்து இருக்கின்றார். தற்போது அரசியலில் களம் இறங்கி எம்பியாக கலக்கி வருகின்றார். எந்த விஷயம் செய்தாலும் அதனை போல்டாக தைரியமாக செய்யக்கூடிய ஒரு நடிகை. இவர் தற்போது திருமணம் குறித்து பேசி இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “அனைவருக்கும் ஒரு துணை தேவை. துணை இன்றி வாழ்வது என்பது கடிதம். அப்படி வாழ்வது எளிதல்ல, தேடி தேடி உங்கள் துணையை கண்டுபிடித்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கலாம். அது தானாகவே நடக்கும்” என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்த அவர் யார் அந்த நபர் என்பதை தற்போது வரை கூறவில்லை. ஆனால் விரைவில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது தெரியவந்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.