---Advertisement---

இருக்கு ஆனா இல்லை!…குழப்பி விட்ட ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி?…

Published on: June 25, 2024
jeyam ravi
---Advertisement---

திரை உலகில் காதல் திருமணங்கள் நடப்பது  எல்லாத்துறைகளையும் போல சகஜமாகத்தான் இருந்து வருகிறது. உயிருக்கு உயிராக காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. திருமணம் எப்படி நடக்கிறதோ அதே போல தான் விவாகரத்துக்களும்.

ராமராஜன் – நளினி, தனுஷ் – ஐஸ்வர்யா, எல்.விஜய் – அமலாபால், ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி என சொல்லிக்கொண்டே போகலாம். காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி. இந்த வரிசையில் இணையப்போகிறது இன்னொரு தம்பதி என சமீபத்தில் பேச்சுக்கள் இருந்து வருகிறது.

jeyam ravi aarthi
jeyam ravi aarthi

‘ஜெயம்’ பட வெற்றியை தொடர்ந்து இளம் கதாநாயகர்களில் முன்னனி இடத்தில் இருப்பவர் ‘ஜெயம்’ரவி. இவரது மனைவி ஆர்த்தி. இருவரும் காதலித்து மணமுடித்தவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள்.

இருவரும்  டிவர்ஸ் செய்து கொள்ளப்போகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் தனது சமூக வலைதள பதிவுகளிலிருந்து ‘ஜெயம்’ரவியின் படங்களை நீக்கியுள்ளார். வந்தடைந்த செய்திகள் எல்லாம் வதந்தி தான் என நினைத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ப்ரொஃபைல் பிக்சரில் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடியாக நிற்கும் படம் தான் இன்னும் இருந்து வருகிறது.  டிபியில் ஃபோட்டோ இருக்கு, ஆனா அப்லோட்களில் இல்லை.

எஸ்.ஜே.சூர்யா படத்தில் பேசும் வசனம் போலதான் இருக்கு ஆனா இல்லன்னு சொல்லும் விதமாக ஜெயம் ரவியின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டிடுக்கிறார் அவரது மனைவி ஆர்த்தி. சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்புகளை பெறவில்லை என்பதும் குறிப்படத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!