---Advertisement---

சாமியா…சாத்தானா!…சர்பிரைஸ் கொடுக்க போற சார்?…

Published on: June 19, 2024
sir
---Advertisement---

“மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்” இதனை சுருக்கி”மா.பொ.சி” என தனது படத்திற்கு பெயர் வைத்தார் இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட். பெயர் பற்றி கேள்விப்பட்டதும் போஸை அழைத்த சிவக்குமார் இந்த பெயர் ஒரு மிகப்பெரிய நபரின் பெயர். அவரது பெயரை வைத்து டாக்குமென்டரி படம் எடுக்க இருக்கிறோம் என சொல்லி பெயரை மாற்ற கேட்டிருக்கிறாராம்.

அதன் பிறகே “மா.பொ.சி”, “சார்” ஆக மாறியிருக்கிறார். விமல், சாயா நடித்திருக்கின்றார்கள் படத்தில். குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட். சித்து குமார் இசையமைத்திருக்கிறார். “பருத்தி வீரன்” சித்தப்பு செவ்வாழை தான்  வில்லன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது படம்.

vimal saravanan
vimal saravanan

ஸ்கூல் டீச்சராக விமல் – சாயா, இருவருக்குமிடையே லவ். இப்படி போய் கொண்டிருக்கின்ற நேரத்தில் தெய்வ நம்பிக்கையை காரணம் காட்டி ஸ்கூலை மொத்தமாக மூடி விட நினைக்கிறது ஒரு கும்பல். அதோடு விமல் – சாயா காதலுக்கு முட்டுக்கட்டை வருகிறது. இதை எல்லாம் தாண்டி இருவரும் எப்படி சேருகிறார்கள்.பள்ளிக்கூடம் மூடப்பட்டதா? என்பது தான் படத்தின் கதையாம்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு கல்வி சாமி தெரியும் ஆனால் சுயநலத்திற்காக கல்விக்கூடத்தை மூட நினைக்கும் கும்பலுக்கு அது சாத்தானாகத்தான் தெரியும். இதற்கு விடை சொல்வது தான் படத்தின் முழுக்கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான “சார்” பட டீஸர். விமல் – சரவணன் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என நினைக்க வைத்துவிடுகிறது “சார்”.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!