---Advertisement---

மைக்க கையில கொடுக்க மறந்துட்டீங்களே டைரக்டரே?…ஹரா பட விமர்சனம்…

Published on: June 7, 2024
mic mohan
---Advertisement---

“சுட்டபழம்” படத்திற்கு பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மோகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார் “ஹரா” படத்தில். இன்று வெளியாகி இருக்கிறது “ஹரா”. வெள்ளி விழா நாயகர்கள் இப்போது மீண்டும் வரிசை கட்டி வரத்துவங்கியுள்ளனர் தமிழ் சினிமாவில் என்றே சொல்லலாம்.

“மேதை”க்கு பிறகு “சாமானியன்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன். அதே போல “ஹரா”வில் மோகன்.

mohan
mohan

தனது மகளின் இறப்புக்கு காரணனமானவர்கள் யார்?, அவர்களை எப்படி பழிவாங்குகிறார் மோகன், இவர் மீது போலீஸின் மீதான பார்வை எப்படிப்பட்டது. இவரது பழிவாங்கும் செயலால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் இதுவே கதை. பாசம் கொண்ட ஆக்ரோஷமான தந்தையாக மோகன் நடித்திருக்கிறார்.

அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள் “ஹரா”வில் என்று தான் சொல்ல வேண்டும் போல. சரி படத்தை கொண்டு போன விதமாவத்திலாவது புதுமை இருக்கிறதா என பார்த்தால் அதுவும் பாழைடைந்த பழைய பங்களாவாகத்தான் இருக்கிறது.

தனது படங்களில் சண்டை காட்சிளை குறைவாக கொண்டு நடித்தவர் மோகன். “ஹரா” படத்தின் ரசிகர்களை கவர அவரது கையில் இருந்த ஆஸ்தான ஆயுதமான மைக்கை பிடிங்கி விட்டு  இயக்குனர் விஜய் ஸ்ரீஜி துப்பாக்கியை கொடுத்துள்ளார்.

 

மோகன் படங்கள் என்றாலே பாடல்கள் முக்கியத்துவம் பெறும். “ஹரா” பாடல்கள் ரசாந்த் அர்வின் இசையில் கொஞ்சம் ஓ.கே. தானாம். ஆனால் பின்னனி இசை பக்கா பொருத்தம்.

கோவை மோகன் ராஜ் தயாரிப்பில் சந்திரஹாசன், அனுமோள், யோகிபாபு,  சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், கோபி என பலரும் நடித்துள்ளனர்.

பழைய அழகின் தோற்றத்தில்  தான் இன்னும் இருக்கிறார் மோகன். நடித்துள்ள விதத்தில் தான் மாற்றமே தவிர கதையிலோ, திரைக்கதையிலோ இல்லை. மோகனை திரையில் பார்த்து நாளாகி விட்டதே என நினைத்த அவரது ரசிகர்களுக்கான படம் தான் இது. மோகனை மட்டுமே தான் ரசிக்க முடியும் வேறு எதுவும் சொல்லும் அளவில் இல்லை படத்தில்.

ரீ-என்ட்ரி கொடுக்க நினைத்த மோகன் கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செய்திருக்கலாம். பார்த்து சலித்து போன கதையில் நடித்ததற்கு பதிலாக பழைய படி இளையாராவை கூப்பிட்டு 5 பாடல்களை போடச்சொல்லி மைக்கை கையில் எடுத்திருக்கலாம் மோகன்.

“ஹரா” மொத்தத்தில் ஹேப்பி (happy) டு (to) சீ (see) மோகன் (mohan) அகெய்ன்(again) மட்டும் தான்.

 

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official award poster of actress Honey Rose winning the 2nd Best Actress at the 49th Kerala Film Critics Award 2025 for Rachel.

49th Kerala Film Critics: “ரேச்சல் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!” முதல் விருதை வென்று நெகிழ்ந்த ஹனி ரோஸ்.. வைரலாகும் போஸ்டர்!

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official announcement poster of director Singeetham Srinivasa Rao's #SSR61 produced by Nag Ashwin.

SSR61 Update: “யாரும் பார்த்திராத ஒரு கதை!” 40 ஆண்டு கனவு.. சிங்கீதம் சீனிவாச ராவ் – நாக் அஸ்வின் கூட்டணியின் பிரம்மாண்ட அறிவிப்பு!

A collection of candid and charismatic high-definition photos of actor Sivakarthikeyan from recent public events and film promotions.

SK-RKFI Update: “65 கோடி சம்பளம்.. 55 கோடிக்கு ஓடிடி டீல்!” சிவகார்த்திகேயனின் சேயோன்.. கறார் காட்டும் நெட்பிளிக்ஸ்! பின்னணி என்ன?

Actor Yash's official look from Toxic movie with the announcement of the release date postponement.

Toxic Postponed: “ஜூன் 4-ல் டாக்ஸிக் வராது!” ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராக்ஸ்டார் யாஷ்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன்?

Actor Parthiban interacting with the press outside Chennai High Court after his 'No Caste' certificate case was closed.

Parthiban Case Update: “சாதி இல்லைனு சொல்ல ஏன் இவ்வளவு போராட்டம்?” சான்றிதழ் வாங்கிய பின் பார்த்திபன் கேள்வி! வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் சொன்ன அதிரடி அறிவுரை!