---Advertisement---

இதுக்கெல்லாம் ஊர்வசி செட் ஆக மாட்டாங்க!…ஒப்பனா சொல்லி ஒதுக்கிவிட்ட ரஜினிகாந்த்…

Published on: June 6, 2024
rajini urvasi
---Advertisement---

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சரத் பாபு, மீனா, சுபஸ்ரீ, செந்தில், வடிவேலு நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படம் “முத்து”. சொத்துகளுக்கு உரிமைப்பட்டவரான “முத்து” ரஜினி,  தான் ஆள  வேண்டிய இடத்தில் வேலைக்காரனாக நடித்திருப்பார், சரத்பாபுவை எஜமான் என்று அழைப்பார்.

ரஜினியும், மீனாவும் காதலிக்க இது தெரியாமல் மீனாவை ஒரு தலையாக காதலிப்பார் சரத் பாபு. இதனால் ரஜினி-சரத் பாபு இடையே வந்து விடும்  மோதல், அதன் பின் ஃப்ளாஷ் பேக்கில் மிகப்பெரிய உண்மை ஒன்று தெரியவர, மீண்டும் ரஜினி – சரத் இருவரும் இணைவார்கள்.

subasree sarathbabu
subasree sarathbabu

இப்படியாக கதை நகரும். தனது மாமாவின் மகளை இறுதியில் கரம் பிடிப்பார் சரத் பாபு.இந்த கேரக்டரில் சுபஸ்ரீ நடித்திருந்தார்.படத்தில் பணிபுரிந்த ரமேஷ் கண்ணாவிற்கோ சுபஸ்ரீ நடித்த இடத்தில் ஊர்வசியை நடிக்க வைக்க அதிக ஆசை இருந்ததாம்.

 

அவரது கலகலப்பான அப்பாவித்தனமான நடிப்பு படத்திற்கு இன்னொரு ப்ளஸ் ஆகும் என நினைத்து தனது ஆசையை இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு சம்மதம் சொன்ன கே.எஸ்.ரவிக்குமார் ஊர்வசியிடம் இதைப்பற்றி சொல்லிவிட்டாராம்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினி,  இந்த வேடத்திற்கு படத்தில் அதிக வேலை கிடையாது. ஊர்வசி போன்ற நடிப்பிற்கு சவால் விடக்கூடியவரின் தகுதிக்கு குறைவான வேஷம் இது என சொல்லி முடிவை மாற்ற சொன்னாராம்.

ரஜினி சொன்னதை தட்ட முடியாத ரவிக்குமார் இதைன் எப்படி ஊர்வசியிடம் சொல்வது என தயக்கம் காட்டினாராம். இதை தெரிந்து கொண்ட ரஜினியோ உங்களுக்கு அந்த கவலை வேண்டாம், அதை தான் பார்த்து கொள்வதாக சொன்னாராம்.

அதே போல ஊர்வசியிடம் இது அவ்வளவு வலிமையான கதாப்பாத்திரம் கிடையாது. உங்களை போன்ற சிறப்பான நடிகைக்கு ஈடுகொடுப்பது கிடையாது இந்த கேரக்டர் என சொல்லி சமாதானம் செய்து விட்டாராம். அதன் பின்னரே சுபஸ்ரீ நடித்திருக்கிறார். இந்த தகவலை நடிகரும், உதவி இயக்குனருமான ரமேஷ் கண்ணா சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.