---Advertisement---

சிவாஜியையே எதிர்த்து பேசிய நடிகை… நடிகர் திலகத்தையே கோவப்படுத்தி பார்த்த இளவரசி?…

Published on: June 3, 2024
---Advertisement---

“ராஜ ராஜ சோழன்” படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடிக்க சிவக்குமார் லட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட பலரும் அவருடன் இணைந்து இருந்தார்கள் படத்தில். சூட்டிங் காலை 7 மணிக்கு தொடங்கும் என்றால் சிவாஜியோ ஆறு மணிக்கே மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பாராம்.

மற்ற நடிகர்களை எல்லாம் சிவாஜியே செட்டுக்கு வந்து விட்டார், நீங்கள் ஏன் இன்னும் ரெடியாகவில்லை என பட குழுவினர் சொல்லி அழைப்பார்களாம். சிவாஜி வந்த உடனே மிகுந்த பயத்தோடு நடந்து கொள்வார்களாம். அந்த அளவிற்கு அவரின் மீது அவர்களுக்கு மரியாதை இருந்ததாம்.

raja raja chozhan
raja raja chozhan

படப்பிடிப்பின் போது சிவாஜியிடம் பேசும்போதெல்லாம் லட்சுமி சிவாஜி சொல்லுவதை கேட்காமல் அதற்கு எதிர்வாதமாகவே பேசிக்கொண்டே இருப்பாராம்.

சிவாஜியை பார்த்து ‘அங்கிள்’ என அழைத்தபோது சிவாஜியே அவரை தடுத்து நான் கம்பீரமான ஒரு கெட்டப்பில் இருக்கிறேன் என்னை ‘அங்கிள்’ என்று அழைக்காதே “ராஜாதி ராஜா”, “அரசே” என கூப்பிடு என்பாராம்.

அதே போல ராணி குந்தவை வேடத்தில்  இருக்கிறாய் நீ, அதற்கான கம்பீரத்தை  எப்பொழுதுமே காட்ட வேண்டும் உட்காரும் போது கம்பீரமாக உட்கார். கூன் போட்டு அமரக்கூடாது. நீ போட்டிருக்கும் வேஷத்தின் உணர்வை உனது செயல்களே வெளிப்படுத்தும்  என லட்சுமிக்கு அறிவுரைகளை கூறினாராம் சிவாஜி.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  காதலுக்கு கேட் போட்ட சரத்குமார்!...நாட்டாமை மட்டும் தீர்ப்ப மாத்தி சொல்லியிருந்தா வரலட்சுமியோட வாழ்க்கை?...

இதே போல எம்.ஜி.ஆரும் லட்சுமிக்கு பல அறிவுரைகளை கூறி இருந்திருக்கிறார். உடற்பயிற்சி செய் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.  இப்படி  இவர்கள் இருவரும் லட்சுமிக்கு அறிவுரை கொடுத்து அவரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் என்று லட்சுமி ஒருமுறை தனது பேட்டியின் போது சொல்லி இருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring the production update and casting change for Daredevil.

‘டேர்டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்: ஸ்ரீலீலாவுக்குப் பதிலாக களமிறங்கும் கயாடு லோஹர்!

Editorial visual featuring the first look poster of the film Milo.

முகின் ராவ் நடிக்கும் ‘மைலோ’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் புதிய சினிமா அப்டேட்!

rkfi-seyon-dharman-slate-updates

ராஜ் கமல் ஃபில்ம்ஸ்-யின் அடுத்தடுத்த பிரம்மாண்டங்கள்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் ரஜினியின் ‘தர்மன்’ அப்டேட்டுகள்!

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!