---Advertisement---

அழகான ஆத்மா அஜித்… புகழ்ந்து தள்ளிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி….

Published on: May 29, 2024
siranjeevi ajith
---Advertisement---

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும்  “குட்…பேட்.. அக்லி…படத்தினுடைய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ராமோஜி ராவ்  ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த சூட்டிங் பாட்டுக்கு அருகே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் “விஸ்வம்பரா” படத்தினுடைய படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

படப்பிடிப்பின் இடையே அஜித்குமார் யாரும் எதிர்பாராத விதமாக சிரஞ்சீவி பட சூட்டிங் நடக்கும் ஸ்பாட்டிற்கு சென்று இருக்கிறார் அங்கு சிரஞ்சீவியை சந்தித்து கைக்குலுக்கி பேசியும் இருக்கிறார்.

siranjeevi ajith
siranjeevi ajith

தங்களது  படப்பிடிப்பு தளத்திற்கு ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நபர் வந்ததாகவும்.  அந்த முக்கியமான நபர்  வேறு யாரும் அல்ல அஜீத் தான் என அஜீத்துடனான சந்திப்பு குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சிரஞ்சீவி.

இதனைத் தொடர்ந்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதோடு அன்பான இதயம் கொண்ட அழகான ஆத்மா அஜித் என்றும் புகழ்ந்துள்ளார்.

அதோடு அஜீத் தமிழ் சினிமாவில் அடைந்துள்ள நட்சத்திர அந்தஸ்து தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இருவரும் அரட்டை அடித்து பேசினோம் எனவும் தனது வலைதளத்தில் சொல்லியிருக்கிறார்.

சிரஞ்சீவி பகிர்ந்திருந்த அஜீத்துடனான இருவரின் புகைப்படம் தான் இப்பொழுது  வைரலாகி வருகிறது. “விடாமுயற்சி” படம் போல இல்லமல் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்தியே அஜீத் ரசிகர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியடையச்செய்திருந்தது.

 

இந்நிலையில் அஜீத் பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்காதா என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சிரஞ்சீவி கொடுத்துள்ள இந்த தகவல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே “விடாமுயற்சி” படத்தினை தீபாவளியன்று வெளியிட வைக்க வேலைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தியின் உண்மைத்தன்மையை பற்றி அஜீத்குமாரின் ரசிகர்கள் சிந்தித்தும் வருகிறனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!

Buzz handles suggest actor and director Pradeep Ranganathan might block his next movie PR06 with AGS Entertainment.

மீண்டும் ஒன்னா சேரும் லவ் டுடே கூட்டணி… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தைப் பற்றி கிளம்பிய மரண மாஸ் வதந்தி!

Mega Power Star Ram Charan starrer sports drama movie Peddi registers a massive opening crossing 100 crore gross worldwide on Day 1.

முதல் நாளே 100 கோடியைத் தாண்டி மரண மாஸ் காட்டிய பெத்தி… தியேட்டர்களில் ராம் சரணின் பாக்ஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம்!

Director Chidambaram next Malayalam film Balan The Boy official trailer releasing today evening ahead of June 19 theatrical release.

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த மரண மாஸ் படம்… பாலன் படத்தின் திக் திக் ட்ரெய்லர் இன்னைக்கு சாயங்காலம் ரிலீஸ்!