---Advertisement---

கில்லி எல்லாம் காலி தான் படையப்பா படையெடுத்தால்?…விஜய் ரசிகர்களை சீண்டிப்பார்க்கும் தயாரிப்பாளர்…

Published on: May 28, 2024
vijay rajini
---Advertisement---

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஒரு சிலருக்கு கொண்டாட்டம் தான் இப்போது நிலவி வரும் சூழ்நிலையால். பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை இந்தாண்டு துவக்கத்திலிருந்தே. அதே நேரத்தில் புது இயக்குனர்கள், கதாநாயகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரிதாக எடுபடவுமில்லை. இதானால் தங்களது வெற்றி படங்களை அதிக சிரமமின்றி வெளியிட்டு பணம் பார்த்து வருகின்றனர்.

ஆனாலும் தமிழ் திரை உலகம் மீண்டும் சுறுசுறுப்பானது கடந்த சில மாதங்களாக. இப்படி விறுவிறுப்பை தூண்டிய பெருமை விஜயையே சாரும். “கில்லி” பட ரீ-ரிலீஸ் படம் இப்பொது தான் முதன் முறையாக வெளியாவது போல வரவற்பும், அள்ளிக்குவித்த கலக்சனுமே இதற்கு சான்று.

என்ன தான் அஜீத்தின் பிறந்த தினத்தில் அவரது இரண்டு ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்ய்யப்பட்டிருந்தாலும், “கில்லி” வாங்கிக்கொடுத்த பெயரையும், வசூலையும் பெறவில்லை என்பது தான் உண்மை என சொல்லப்படுகிறது. இப்போது ரஜினியும் தனது வெற்றி படம் ஒன்றை மறு வெளியீடு செய்யலாமா? என யோசித்து வருகிறாராம்.

vijay thenappan rajini
vijay thenappan rajini

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “படையப்பா” படத்தை தான் ரீ-ரிலீஸ் செய்யா திட்டமிடப்படுகிறதாம். சமீபத்தில் இது குறித்து பேசியிருந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் ரஜினியுடன் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது என சொல்லியிருக்கிறார்.

அதே நேரத்தில் “படையப்பா” படத்தை 2கே கிட்ஸ் பார்த்துவிட்டால் ரஜினியின் ஸ்டைலான நடிப்பிற்கும், அதனை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த விதத்திற்கும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதோடு “படையாப்பா” மறு வெளியீடு வந்தால் “கில்லி”யின் ரீ-ரிலீஸ் வசூலை சாதனையை எல்லாம் முறியடித்து, வேற லெவெல் கலக்ஷனை கொடுக்கும் என்றுள்ளார். படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதால் இவர் இப்படி சொல்லியிருந்தாலும்  இது விஜய் ரசிகர்களை வம்பிழுப்பது போல இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Vishnu Vishal talking about the struggles behind the movie Ratsasan.

17 ஹீரோக்கள் நிராகரித்த ‘ராட்சசன்’! நான் வெறும் ‘பேக்கப்’ தானா? மனமுடைந்து பேசிய விஷ்ணு விஷால்!

Dravid Selvam, actor and dialogue writer, working on his upcoming projects.

‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் டபுள் என்ட்ரி! எழுத்தாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டை கலக்கும் ‘டியூட்’ பட புகழ் டிராவிட்

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!