---Advertisement---

சீண்டிப்பார்த்த யவன் ஷங்கர் ராஜா…பரவாயில்லை போங்கன்னு மண்ணிச்சுவிட்ட மன்மதன்!…

Published on: May 23, 2024
yuvan shankar
---Advertisement---

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் மிகமிக முக்கியமானவர். இவரது பாடல்களை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. பாடல்களால் மட்டுமல்லாது, தனது பின்னனி இசையினால் ஈர்த்தவர் இவர் ரசிகர்களை. வெங்கட் பிரபு படம் என்றாலே இவர் தான் இசயமைப்பார் என அடித்து சொல்லிவிடலாம்.

தனது சகோதரரான பிரேம்ஜி அமரனுடன் நெருக்கம் கொண்டிருக்கும் இவர் கொஞ்சம் குறும்புக்காரர் தானாம். இருவரும் இணைந்து சிம்புவை ப்ராங்க் செய்துள்ளார்கள். சிம்புவின் “மன்மதன்” படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் ரீ-ரெக்கார்டிங்னகின் போது பிரேம்ஜியுடன் சேர்ந்து சிம்புவை இவர் ப்ராங்க் செய்திருந்தாராம்.

simbu
simbu

“மன்மதன்” படத்தில் திருப்புமுனை காட்சியான சிம்புவின் காதலி, தனது ஆண் நண்பருடன் ‘க்ரூப்-ஸ்டடி செய்யும் காட்சி. அதன் பிறகு தான் மதன்,  மன்மதனாக மாறுவார். அவ்வளவு சீரியஸான காட்சி அது. அந்த காட்சிக்கு யுவன் ரீ-ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் போது பிரேம்ஜியும் உடனிருந்தாராம். சீரியஸான அந்த காட்சிக்கு யுவன் சிரிப்பு வரவைக்கும் விதமான ஒரு மியூசிக்கை காட்சியோடு சேர்த்துவிட்டாராம்.

இதனைப்பார்த்த சிம்பு அதிர்ச்சியில் துள்ளி குதித்து யுவன், பிரேம்ஜியிடம் யோவ் என்னயா இது என கோவமாக கேட்டாராம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த இருவரும் சிம்புவை கூல் செய்து சும்மா  ப்ராங்க் செய்யவே இப்படி செய்தோம் என்று சொன்ன பிறகே ரொம்ப சீரியஸாக இருந்த சிம்பு நார்மல் ஆனாராம். யுவன் ஷங்கர் ராஜாவே ஒரு முறை இந்த சம்பவத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement banner for the M.S. Subbulakshmi biopic starring Rashmika Mandanna.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்: லெஜண்ட் பாடகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, கவுதம் தின்னகானுரி இயக்குகிறார்!

Character reveal poster featuring Ramya Krishnan as Kamala Reddy in the film David Reddy.

“டேவிட் ரெட்டி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன்: மிரட்டலான ‘கமலா ரெட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Visual representation of the Ajith Kumar Racing video shared on Vijay's Instagram.

தளபதி விஜய்யின் இன்ஸ்டாவில் அஜித்தின் கார் பந்தய வீடியோ: 18 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்குகளைக் குவித்து சாதனை!

Social media image of popular Tamil serial actress Reshma Muralidharan.

“கவர்ச்சி போட்டோக்களால் வந்த வினையா? கணவரைப் பிரிந்த சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் குறித்த ஷாக்கிங் தகவல்!

Official title announcement poster for Chiyaan Vikram's Powerhouse.

சீயான் விக்ரமின் ‘பவர்ஹவுஸ்’: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியான டைட்டில் அவுட்!

Official theatrical release banner for Nani's upcoming action drama The Paradise.

“தி பாரடைஸ்’ ரிலீஸ் அப்டேட்: இன்னும் 9 நாட்களில் திரைக்கு வரும் நானியின் மாஸ் படம்!