---Advertisement---

நாகேஷ் கேட்ட ஒரு கேள்வி!…சிரித்த எம்.ஜி.ஆர்!…அப்படி என்னதான் கேட்டு விட்டாரு?..

Published on: May 12, 2024
mgr nagesh
---Advertisement---

.”கலங்கரை விளக்கம்” படத்தில் எம். ஜி.ஆர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட விட்டதாம். நாகேஷ், எம்.ஜி.ஆர் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்ததாம். நாகேஷை தொலைபேசியில் அழைத்த எம்.ஜி.ஆர் என்னைப்போன்ற சின்ன நடிகர்கள் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.

உங்களை போன்ற பெரிய நடிகர்களின் காட்சி மட்டும் தான் பாக்கியிருக்கிறது. அதனால் கால்ஷீட் கொடுங்கள் என கேட்டாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாகேஷ் இரண்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். எம்.ஜி.ஆர். போன்ற பிரபலம் தன்னை பார்த்து இப்படி சொல்லியது தன்னுடைய மெத்தனத்தை சுட்டிக்காட்டியதாக நினைத்து வருந்தியிருக்கிறார்.

mgr nagesh
mgr nagesh

அதன் பிறகு படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்படி இருக்கும் பொழுது நாகேஷ், எம்.ஜி.ஆரை பார்த்து துவக்கத்தில் என்னிடம் என்ன சொன்னீர்கள் என்றால் தயாரிப்பாளர்கள் உன்னை தேடி வரும் பொழுது அவர்களுக்கு தேதி கொடுத்து விட்டால் அந்த தேதியில் சென்று நடித்து விடு இல்லை அவர்களுக்கு நஷ்டமாகி விடும் என்று சொல்லி இருந்தீர்கள்.

நீங்களும் கால்ஷீட் கொடுத்துவிட்டு அதை கேன்சலும் பண்ணி இருக்கீங்களே?. அப்ப நான் கேன்சல் பண்ணா மட்டும்தான் நஷ்டம் வருமா?, நீங்க பண்ணா நஷ்டம் வராதா? என பகீர் என்று ஒரு கேள்வியை எம்.ஜி.ஆரிடம் நேருக்கு நேராக கேட்டுயிருக்கிறார் நாகேஷ். அந்த கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தாராம் எம்.ஜி.ஆர். அதன் காரணம் என்னவென்று நாகேஷுக்கு தெரிந்திருக்குமா என தெரியாது. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு எம்ஜிஆர் சொல்லியதன் அர்த்தம் நிச்சயமாக தெரிந்திருக்கும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!