“சென்னை 600 – 018” படத்தினை இரண்டு பாகங்களாக எடுத்து கிரிக்கெட்டின் மேல் தனக்குள்ள ஆர்வத்தை நேரடியாக காட்டி இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் தற்போது விஜயை வைத்து கோட்டு படத்தை இயக்கி வருகிறார். ஏறத்தாழ படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் தான் இருக்கின்றது.
இந்த நேரத்திலே “கோட்” படம் பற்றிய ஒரு செய்தி வெளிவந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் இரண்டு பேர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்களாம்.
அதோடு மட்டுமல்லாது இந்த படத்தில் வெங்கட் பிரபு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து வர உள்ளாராம். சமீபத்தில் வெளியான “கோட்” பட பாடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ரமோ பாடலில் ‘விசில் போடு’ என வருவது போல ‘விசில் போடு’ என வரிகள் சேர்க்கப்பட்டுள்ளது இதனால் தானோ நினைக்க வைத்து விட்டார்.

இது சிம்பு படத்தில் வரும் அப்போ புரியல, இப்போ புரியுது எனபது போல அந்தணன் சொல்லியுள்ள தகவல் நினைக்க வைத்து விட்டது. அதோடு மட்டுமல்லாது விஜயை கூட மஞ்சள் நிற ஜெர்ஸியை மாட்டி படத்தில் வரச்சொல்லியிருக்கலாம் எனவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.
இந்த தகவல் “கனா” படம் போல கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை விஜய் ரசிகர்களிடம் வரவலைக்கலாம்.இதே போல விஜயின் அடுத்த படம் குறித்த தகவலையும் சொல்லியுள்ளார். “விஜய் 69” படத்தினுடைய தயாரிக்கும் பணியை கே.பி.என். நிறுவனம் பேசப்பட்டு வருவதாகவும் கூறி இருக்கிறார்

