cinema news
வடிவேலுல்லாம் அவ்ளோ ஒர்த் கிடையாது…கழுவி கழுவி ஊத்திய காமெடி நடிகர்!…
வடிவேலு இந்த பேரை கேட்டாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு நகைச்சுவையோடு ஒத்து போனவர். தமிழக ரசிகர்கள் மனதிலும் நிறைந்திருந்தவர். எந்த டிவி சேனலை திருப்பினாலும் இவருடைய நகைச்சுவை காட்சிகள் தான் அதிகம் நம் கண்களில் படும்.
அப்படியொரு வாழ்வை தமிழ் சினிமாவில் வாழ்ந்து வந்தார். யார் கண் பட்டதோ இப்பொதெல்லாம் அவரை மீம்ஸ்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது அவரை “மாமன்னன்” படத்தில் நடித்த பிறகு மீண்டும் அடுத்த ரவுண்டு நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த எண்ணம் தவிடு பொடியாகி போனது. அதன் பின்னர் படங்கள் ஏதும் பெரிதாக வெளிவரவில்லை வடிவேலுவிற்கு. ஆனால் அவருடன் நடித்த சக நடிகர்கள் எல்லாம் அவரைப் பற்றி பெருமையாக பேசுவது மிகக் குறைவு தான்.
காமெடி நடிகர் கொட்டாச்சி வடிவேலுவை பற்றி சமீபத்தில் பேசி அவரை கழுவி, கழுவி ஊற்றியிருக்கிறார். விவேக்கின் வேஷ்டியை பிடித்துக்கொண்டே செல்வாரே “பெண்னின் மனதை தொட்டு” படத்தில் அதே கொட்டாச்சி தான்.
பிறருக்கு உதவ வேண்டும் என்கின்ற எண்ணம் வடிவேலுக்கு அறவே கிடையாதாம். தான் சொல்லுவது உண்மை என நீங்க நம்பவில்லை என்றால் அவருடன் நடித்த வேறு சில சக நடிகர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள்.
அவர் எவருக்கும் எந்த உதவியும் செய்வது கிடையாது. அப்படிப்பட்ட குணம் கொண்டவர்தான் வடிவேலு என காய்ச்சி தள்ளியிருந்தார். மேலும் விவேக் சொன்னதால் தான் வடிவேலுவை சென்று சந்தித்ததாகவும். அவர் சொன்னதால் தான் வாடிவேலுவுடன் இணைந்ததாகவும் கொட்டாச்சி சொல்லி இருந்தார்.