---Advertisement---

படையப்பா போஸ்டரை ஒட்டீட்டு பாளையாத்தம்மனை காட்டிடீங்களே சுந்தர் சி!…என்னது தமன்னா தங்கச்சியா?…

Published on: May 3, 2024
aranamanai
---Advertisement---

அரண்மனை முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சுந்தர்.சி வரிசையாக இரண்டு, மூன்று என நான்கு பாகங்களை எடுத்து அதே அரண்மனையிலேயே தனது திரை வாழ்வை தொடர்ந்து வருகிறார்.

இன்று ரிலீஸ் ஆகி உள்ளது அரண்மனை 4. படத்தில் சுந்தர்.சிக்கு தங்கையாக நடித்துள்ளார் தமன்னா. டீசர் பாடலில்  நடனத்தை பார்த்த ரசிகர்கள்,  தமன்னாவுக்கு மிக முக்கியமான வேடம் வழங்கப்பட்டிருக்கும், அவர் தான் கதாநாயகி என்று  தவறான கணக்கை போட்டு விட்டார்கள் என நினைக்க வைத்துவிட்டது படம் வெளிவந்த பிறகு.

வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் “வேதாளம்”,  “அண்ணாத்த” போன்ற  .அண்ணன் – தங்கச்சி’ சென்டிமென்ட் படங்களை அதிகமாக பார்த்திருக்கிறார் போல சுந்தர் சி. அரண்மனையை வாங்கி அதில் சில பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதை விற்கும் முயற்சியில் இருப்பார் தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப்.

aranmanai
aranmanai

இந்த நேரத்தில் தமன்னா திடீரென தற்கொலை செய்து விட்டதாகவும்,
அதேபோல அவரின் கணவரும் மரணம் அடைந்து விட்டதாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வர, அரண்மனைக்கு விரைகிறார் சுந்தர். சி.

அங்கு தனது தங்கையினுடைய குழந்தைகளை கொல்ல நினைக்கும் அமானுஷ்ய சக்திகளின் நோக்கம் என்ன?,  அவைகளிடமிருந்து எல்லோரையும் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதுதான் இந்த படத்தின் முக்கிய கதை.

கதாநாயகியாக வரும் ராஷி கண்ணா அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். “கோவை”சரளா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ் காமெடியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை கச்சிதமாக முடித்துள்ளனர்.

படத்தினுடைய இசை திருப்திகரமாக இருப்பதாக முதல் கட்ட விமர்சனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு குஷ்பூவும்,  சிம்ரனும் திடீரென வந்து ஆடி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பழிவாங்கும் கதையாக இருந்தாலும், பார்க்கும் விதமாகவே அமைந்திருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற பாகங்களில் இருந்ததை விட அரண்மனை-4ல்  விறுவிறுப்பு சற்றே அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!