---Advertisement---

நான் தான் மகாராஜா!…அரை சதம் அடித்து அசத்திய சுமார் மூஞ்சி குமாரு…

Published on: May 30, 2024
maharaja
---Advertisement---

எத்தனை தோல்விகளைப்பார்த்தாலும் நான் அதுக்கெல்லாம் அசருர ஆளில்லை என சொல்லி, தனது திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தருப்பவர் விஜய்சேதுபதி.  பல படங்களில் சைடு ஆக்ட்ர். அத்தனை திறமைகள் இருந்தாலும் தனக்கான நேரம் வரும் காத்திருந்தவர்.

kumudha
kumudha

“தென் மேற்கு பருவக்காற்று” படத்தில் தான் முதல் திருப்புமுனை, அடுத்தது “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் அசடு வழியும் சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம். குமுதா, குமுதா என இவர் படித்தில் வடித்த ஜொள்ளை ரசித்தார்கள் சினிமா பிரியர்கள்.

“சூதுகவ்வும்”, “தர்மதுரை” என தொடர்ச்சியாக பல படங்கள். வித்தியாசமான நடிப்பை கொடுத்திருந்தார் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில்.

vijay sethupathi
vijay sethupathi

ஹீரோ இமேஜில் கெட்டுவிடக்கூடாது என நினைக்காமல், கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல்  “மாஸ்டர்” படத்தில் விஜயை எதிர்த்த பவானியாக, “விக்ரம்”ல் சந்தானம் என வந்து கமலுக்கு வில்லனாக இப்படி நடிப்பில் அசத்தி வருபவர் விஜய்சேதுபதி.

இப்படி விஜயசேதுபதி படங்கள் என்றாலே தரமாகத்தான் இருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு தியேட்டருக்கு செல்லலாம் என்ற நம்பிக்கைய கொடுத்த தரமான நடிகர். எத்தனையோ ஏற்ற இறக்கங்களைபார்த்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் 50வது படம் என்ற மயாஜால எண்ணிக்கையை எட்டி விட்டார் சினிமாவில் இவர்.

பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், அபிராமி, முனீஷ்காந்த், அருள் தாஸ் என நட்சத்திர கூட்டத்தோடு கோடம்பாக்கதிலிருந்து புறப்பட்டு நகர் வலம் வர காத்திருக்கிறார் “மகாராஜா”. விஜய்சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” படத்தின் டிரையலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!