---Advertisement---

இவரா இளையராஜா?… எனக்கு தெரியவே தெரியாது… உல்டா அடித்த உலகநாயகன்!…

Published on: April 19, 2024
ilayaraja kamalhasan
---Advertisement---

தனது இசை வாழ்க்கையை படமாக எடுக்கும் அளவிற்கு சாதனைகளை குவித்துள்ளவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் நடிக்க வந்த கதாநாயகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரது இசைக்காகவே பல நாட்கள்  ஓடிய படங்களும் உண்டு. தோல்வியடைய வேண்டிய படங்களை கூட தூக்கி நிறுத்திய பெருமை இவரையே சேரும்.
இவர் இசையமைப்பில் நடித்ததாலே பிரபலமானவர்கள் பலரும் உண்டு.

ரஜினி, கமல் என இருவருக்கும் மாறி, மாறி இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. என்னை விட அவருக்கே நல்ல, நல்ல பாடல்களை கொடுத்துள்ளீர்கள் என மாறி, மாறி இருவரும் உரிமையோடு கோபித்துக்கொள்ளும் அளவிற்கு அவர்ளோடு நட்பு பாராட்டியும் வந்தவர்  இவர்.

ilayaraja kamal
ilayaraja kamal

இளையராஜா சினிமாவில் அறிமுகமான காலத்தில் மிகுந்த அமைதியோடே தான் காணப்படுவாராம். இளையராஜவின் சகோதரரான கங்கை அமரனையே முதலில் இளையராஜா என நினைத்துக்கொண்டிருந்தாராம் கமல்ஹாசன்.

இளையராஜாவின் அறிமுக படமான “அன்னக்கிளி” மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்கு அடுத்த படியாக கமல் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம் இளையராஜா. இதனிடையே “அன்னக்கிளி” படத்தின் வெற்றியை கொண்டாட விழா நடத்தப்பட்டது.

விழாவின் போது மேடையில் பெயர் சொல்லி அழைக்கப்பட்டாராம் இளையராஜா. அப்பொழுதுதான் கமலுக்கு பிடிபட்டதாம் தான் இவ்வளவு நாளும் கங்கை அமரனை அல்லவா இளையராஜா என நினைத்துக் கொண்டிருந்தோம் என.

சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த மலையாள திரைப்படம் “மஞ்சு மெல் பாய்ஸ்” வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது “குணா” திரைப்படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் தான். கமல் ஹீரோவான இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Ma Ka Pa Anand addressing the media regarding Watermelon Star Diwakar's allegations at Avadi police station.

CWC 7 Controversy : “பெண்களிடம் தப்பா நடந்துகிட்டாரு” – திவாகர் புகாருக்கு மாகாபா கொடுத்த அதிரடி பதிலடி; ஈவிபி செட்டில் நடந்தது என்ன?

Actor Manikandan in a mass look for his upcoming movie Makkal Kaavalan produced by Neelam Productions.

Makkal Kaavalan : “மணிகண்டனுக்கு இது ஒரு பெரிய மாஸ் படம்” – நீலம் புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் மக்கள் காவலன்!

Director Vignesh Shivan speaking in an interview about spotting Jana Nayagan leak during his Madurai flight.

Jana Nayagan Leak : “அந்த பயன் போனை தட்டிவிட்டேன்” – மதுரையில் விஜய்யின் ஜன நாயகன் படத்தை பார்த்தவரை தடுத்த விக்னேஷ் சிவன்!

Actress Trisha Krishnan in a stylish look from the official movie poster of Karuppu.

TRISHA Dubbing : “திரிஷாவோட ஒரிஜினல் வாய்ஸ்” – கருப்பு படத்தில் நீண்ட காலத்துக்குப் பின் மாஸ் காட்டும் குயின் திரிஷா!

Official statement from Team Peddi announcing the release postponement to June 2026 due to post-production work.

PEDDI Postponed : “ஜூன் மாதம் தான் வர்றோம்” – ராம் சரண் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெத்தி படக்குழு; காரணம் என்ன?

Official poster of movie Kara starring Dhanush announcing the pre-release event at Nehru Indoor Stadium Chennai.

KARA Event : “சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷ்” – மிரட்டலான ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் தேதியை அறிவித்தது கர படக்குழு!