---Advertisement---

அப்போ கடைசி…இப்போ நம்பர் ஒன்னு!…ரேஸில் முந்திய அட்லீ?…

Published on: April 18, 2024
---Advertisement---

“ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கிடைத்தவர் அட்லீ. இளம் வயதுடைய ரசிகர்களை தனது காதல் காட்சிகளாலும், சாதூர்யமான திரைக்கதை, வசனங்கள், காட்சி அமைப்பினாலும்  தன் வசம் ஈர்த்துக் கொண்டவர்.

தனது முதல் படத்தையே ‘ஹிட்’படமாக்கிய இவருக்கு விஜயுடன் தொடர்ச்சியாக இணைய வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.  பாடல், நகைச்சுவை என அனைத்திற்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. “எந்திரன்” படத்தில் ரஜினிகாந்தின் முடி அலங்காரத்தை கவனித்துக் கொள்வது தான் இவரின் வேலையாம். ஷங்கரின் உதவி இயக்குனர்களில் இவருக்கு கடைசி வரிசையில் தான் இடமாம்.

atlee
atlee

கடை கோடி ஊழியனாக இருந்த போதும் ஷங்கரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் பணியை மகிழ்வோடு செய்து வந்தாராம். விஜய் நடித்த “நண்பன்” திரைப்படத்தில் இவர் உதவி இயக்குனர்களில் முதல்  நபராக மாறினாராம். அந்தப் பொறுப்பையும் உரிமையையும் ஷங்கர் வழங்கியது தனக்கு கிடைத்த அங்கீகாரம் என மகிழ்ந்திருக்கிறார் அட்லீ.

ஷங்கரின் நுணுக்கங்களை அருகிலேயே இருந்து பார்த்ததால் தான் தன்னால் இன்று இப்படி ஒரு நிலையை அடைய முடிந்தாக பெருமிதத்தோடு தனது பேட்டி ஒன்றில்  கூறியுள்ளார் அட்லீ. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இவர் இணைந்த “ஜவான்” படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டிய படமாக அமைந்து, இவரது மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. அட்லீயுடன் இணைய வேண்டும் என முன்னணி நடிகர்கள் பலரும் வரிசையில் காத்து நிற்கின்ற இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Teaser launch of the movie Delivery Boy supported by Vijay Sethupathi.

‘டெலிவரி பாய்’ டீசர் வெளியீடு! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட அதிரடி அப்டேட்!

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Vishnu Vishal talking about the struggles behind the movie Ratsasan.

17 ஹீரோக்கள் நிராகரித்த ‘ராட்சசன்’! நான் வெறும் ‘பேக்கப்’ தானா? மனமுடைந்து பேசிய விஷ்ணு விஷால்!

Dravid Selvam, actor and dialogue writer, working on his upcoming projects.

‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் டபுள் என்ட்ரி! எழுத்தாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டை கலக்கும் ‘டியூட்’ பட புகழ் டிராவிட்

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!