---Advertisement---

வேலையை துவக்கிட்டாராமே தலைவர்?…இனி ட்ரெண்ட் கூலி தானா!…

Published on: July 5, 2024
Rajini
---Advertisement---

ரஜினி நடிப்பில் வளர்ந்து வருகிறது “வேட்டையன்”. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஆயுத பூஜை பண்டிகை நேரத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. “ஜெயிலர்” படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான “வேட்டையன்” மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

“வேட்டையன்” படத்தில் நடித்து வந்த போது ரஜினி தனது பழைய ஃபார்முலாவை கையில் எடுத்தார். ஒரு படம் முடிந்து வெளியான பிறகு தான் அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆவதை கடந்த சில ஆண்டுகளாக பழக்கத்தில் வைத்திருந்தார் ரஜினி.

ஆனால் இப்போது இதை மாற்றி தனது பழைய பாதையில் பயணிக்க துவங்கி “வேட்டையன்” பட ஷூட்டிங் நடக்கும் போதே அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி.

coolie
coolie

“கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்”, “லியோ” என வரிசையாக வெற்றிப் படங்களைத் தந்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்தார்.

இவர்கள் இருவரும் இணையும் இந்த படத்திற்கு “கூலி” என பெயரிடப்பட்டுள்ளது. அதோடு படத்தினுடைய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு மாஸை கிளப்பியது. “கூலி” படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் “கூலி” படத்தை பற்றிய அப்-டேட்டை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ். படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது சொல்லி இருக்கிறது சன் பிக்சர்ஸ். படத்தினுடைய ரிலீஸ் தேதி உள்ளிட்ட அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் 'மிர்சாபூர் தி மூவி' படத்தின் சுவரொட்டி.

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டலான தொடக்கம்: முதல் நாளில் ரூ.17 கோடியைக் தாண்டி சாதனை படைத்த ‘மிர்சாபூர் தி மூவி’!

Conceptual graphic representing the reported collaboration between actor Suriya and director Mathimaran.

சூர்யாவின் அடுத்த மெகா கூட்டணி: ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறனுடன் இணையவுள்ளாரா நடிகர் சூர்யா? – வைரலாகும் தகவல்!

Actress Wamiqa Gabbi emerging as Kollywood's new favorite leading lady.

கோலிவுட்டின் புதிய ஃபேவரைட் வாமிகா கபி: விஷால் மற்றும் சூர்யா படங்களுடன் ஹாட்ரிக் ஹிட் – முழு விவரம்!