---Advertisement---

ரஜினிக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்த மலேசியா வாசுதேவன்!…நெருங்க முடியாத ரெக்கார்டு?…

Published on: April 17, 2024
malaysiavasudevan rajini
---Advertisement---

பாடல்களால் ‘மெகா ஹிட்’ ஆனா திரைப்படங்கள் நிறைய உண்டு. திரை உலகில் பாடகர்களுக்கு என ஒரு தனி மதிப்பும் இருக்கிறது. இவர்களது குரலில்  வரும் பாடல்களை படங்களில்  கேட்பதற்காகவே தியேட்டர்களுக்கு செல்லும்  ரசிகர்களும் அதிகமே.

தனது வசிய குரலால் இசை பிரியர்களை  கவர்ந்து இழுத்தவர் மலேசியா வாசுதேவன். எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாடல் பாடுவதற்காக அழைக்கப்பட்டவர் தான் ‘வாசு’.

“16 வயதினிலே” படத்தில்  கமல்ஹாசனுக்காக அவர் பாடிய ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் மூலம் துவங்கியது  இவரது சினி வாழ்க்கை.

பாரதிராஜா,இளையராஜா,ரஜினி,கமல், ஸ்ரீதேவி, கவுண்டமணி என  அனைவரின் ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த ‘ட்ரீட்டாக’ அமைந்த படம் அது.

தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் பல  சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கனேசனுக்காக “முதல் மரியாதை” படத்தில் வரும் ‘பூங்காத்து திரும்புமா’ பாடல் இன்று வரை நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இப்போது  ‘ரீமிக்ஸ்’ செய்யப்படும் பாடல்களில் பல மலேசியா வாசுதேவன் பாடியது. “ஆசை நூறு வகை”,  “காதல் வைபோகமே”, ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம் “பேரு வச்சாலும் வைக்காம”   பாடல்களாக  இருக்கட்டும் இவரது குரலிலேயே இரண்டாவது ரவுண்டு வந்துள்ளது.

rajinikanth1
rajinikanth1

“ஓப்பனிங் சாங்” என்றால்  இது தான் என சொல்ல வைத்து முரட்டுக்காளை” படத்தில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல். ரசிகர்கள் ரஜினியை தலையில் வைத்து கொண்டாட நினைக்கும் நேரத்தில் எல்லாம் இந்த பாடல் இசைக்கப்பட்டு வருகிறது.

வலைதள ‘டெம்ப்லேட்’களுக்காக  பயன்படுத்தப்படும் பாடலாக இன்றும் இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!

Editorial visual representation of Ken Karunas and director Chella Ayyavu's upcoming comedy project.

கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்: இயக்குநர் செல்ல அய்யாவுடன் கூட்டணி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!