---Advertisement---

பாடகர் கேகே மரணம்- பிரபலங்கள் இரங்கல்

Published on: June 1, 2022
---Advertisement---

தமிழில் மின்சாரக்கனவு படத்தின் மூலம் அறிமுகமானவர் கேகே. கிருஷ்ணகுமார் குன்னத் என்பது இவரின் பெயரின் முழு வடிவம் ஆகும். இவர் நேற்று (மே 31) கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த  இசை நிகழ்ச்சி நடந்து முடிந்த சில நிமிடங்களில் பாடகர் கேகே திடீரென மரணம் அடைந்துள்ளார்.

இவர் உயிரின் உயிரே, பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது, கில்லி படத்தின் புகழ்பெற்ற பாடலான அப்படி போடு போன்ற புகழ்பெற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

கொல்கத்தா இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிவிட்டு தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார்.

இவரின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள் என கூறியுள்ளார்.

மேலும் பல பிரபலங்களும் இவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!