---Advertisement---

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்

Published on: May 25, 2022
---Advertisement---

கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க வந்து மேலே உயரே உச்சியிலே என்ற அளவுக்கு சினிமாவில் உச்சாணிக்கொம்பில் சென்று உட்கார்ந்து கொண்டவர் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக மாறன் திரைப்படம் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தனுஷ் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை அனிருத்.

தனுஷை வைத்து உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.