விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டியை ஒரு மாணவன் மழை பெய்கிறதே என்ன ஆச்சு சார் லீவு என டுவிட்டரில் டேக் செய்து கேட்க, பிறகு யோசித்த கலெக்டர் ஒரு வழியாக விடுமுறை விட முடிவு செய்து அந்த மாணவனுக்கு பதில் அளித்துள்ளார்.
தம்பி லீவு விட்டாச்ச்சுப்பா ஒழுங்கா வீட்டுப்பாடங்களை செய்யணும் என அறிவுரை கூறி இருக்கிறார்.
இந்த செய்திகள் வைரலாகி வரும் நிலையில் மாணவர்கள் லீவு விடுங்க என கெஞ்சி கேட்டு ஆட்சியர் விடுமுறை அளித்தது பற்றிய செய்தியில் பதில் அளித்த திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார், சும்மா ஜாலியாக கல்நெஞ்சக்காரர் என சிரிப்பு ஸ்மைலியோடு பதில் கூறி இருக்கிறார்.







