---Advertisement---

சதுரகிரி கோவில் செல்ல பக்தர்களுக்கு தடை

Published on: November 16, 2021
---Advertisement---

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. 7 கிமீ உள்ள மலைப்பாதையை கடப்பதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் அந்த அளவு கரடு முரடான மலைப்பாதை இங்கு உள்ளது.

மழைக்காலங்களில் இந்த பாதைகளில் எந்த நேரமும் ஆபத்து உள்ளது. 1977ம் ஆண்டு இங்கு வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இங்கு வந்த பக்தர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 2015ம் ஆண்டும் இது போல் பெருமழையில் சிக்கி சிலர் உயிரிழந்தனர். 2015 விபத்துக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் சதுரகிரி செல்லலாம் என்று இருந்த விசயங்கள் மாற்றப்பட்டன. மழைக்காலங்களில் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. எவ்வளவு பெரிய விசேஷங்கள் என்றாலும் மழை பெய்தால் மலை ஏற பக்த்ர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது கார்த்திகை, பிரதோஷம், பவுர்ணமி உள்ளிட்ட விசேசங்களை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவு இங்கு வருகை தருகின்ற நிலையில் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதால் பக்தர்கள் சதுரகிரி மலை ஏற வனத்துறை மற்றும் போலீசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.