நடிகர் சூர்யா தனது ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை காரணமாக படத்தில் வில்லன் வீட்டில் காட்டப்படும் காலண்டரில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் எதிர்ப்புகளுக்கிடையே அந்த காலண்டர் மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பாமகவின் அன்புமணி சூர்யாவிடம் விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த சூர்யா நீங்கள் குறிப்பிடுவது போல் எல்லாம் கிடையாது என்ற வகையில் நீண்ட பதில் அளித்திருந்தார்.
இந்த பதிலில் திருப்தியடையாத பாமக உள்ளிட்ட அமைப்புகள் சூர்யாவுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
பாமகவில் இருந்து பிரிந்த அமைப்புகளும் தற்போது பாமகவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.







