தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த். இவர் நடன இயக்கத்தில் வந்த பல படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளன. பல படங்கள் நன்கு பேசப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடன இயக்குனர் கூல் ஜெயந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
விஜய்யின் 15 படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் பிரபுதேவா, ராஜூ சுந்தரத்திடம் உதவியாளராக இருந்தவர் ஆவார்.
இவரது மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.







