கமல் நடித்துள்ள சபாஷ் நாயுடு உள்ளிட்ட படங்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருந்த கமல் திடீர் என மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து கட்சியை வளர்ப்பதற்காக பாடுபட்டார்.
இதனால் கமல் படத்தில் நடிப்பது வெகுவாக குறைந்து போனது. ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்து வந்த இந்தியன் 2 படமும் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை மூன்று வருடங்களாக தடைகளை சந்தித்து வருகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கமல் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் பா.ரஞ்சித் படத்திலும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் என தகவல்.
லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படப்பிடிப்பிலும், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதன் மூலம் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் பிஸியான நடிகராக கமல் மாறி விட்டார்.









