நடிகை கஸ்தூரி எந்த ஒரு அதிரடி கருத்துக்களையும் தயங்காமல் வெளிப்படுத்துபவர். இதனால் நிறைய பிரச்சினைகள் எழுந்தாலும் அதையும் தயங்காமல் எதிர்கொள்வார். அஜீத் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், திமுக, அதிமுகவினர் செய்யும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டுவார் இதனால் பல பிரச்சினைகளையும் டுவிட்டரிலேயே எதிர்கொள்வார் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்.
இவர் சமீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை நகரம் தத்தளித்து வருவதை பார்த்து ஏரியா இருந்ததை ஏரியாவா மாத்திப்புட்ட புண்ணியவான்களே ! உங்களுக்கு தண்ணிக்கு பதில் நீங்க வாங்கின லஞ்சப்பணத்தை குடிக்க குடுக்கணும்!! என காட்டமாக தெரிவித்துள்ளார்.







