தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று விடிய, விடிய மழை கொட்டியது. இந்த மழை இன்னும் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து நவ.11-ஆம் தேதி தமிழகம் அருகே வரக்கூடும் என்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







