ரஷ்யாவில் கொரோனா பரவல் சிறிது காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு போராடி வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இன்று முதல் முழு ஊரடங்கு அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் மாஸ்கோ நகர வீதிகளில் மக்கள் நடமாடி வருகின்றனர்.
விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என அரசு அறிவித்துள்ளது.









