ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்.இவர் நட்சத்திர கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஷாருக்கான் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில்
ஆர்யன் கானை விடுவிக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யன்கான் ஜாமீன் செய்ய மனு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ஆர்யன் கானை இந்த போதைப் பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க பல கோடி பணம் பேரம் நடைபெற்றதாகவும், அது தொடர்பாக அதிகாரி ஒருவர் சிக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புகாரில் சிக்கிய அதிகாரி திடீரென டெல்லி பயணம் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








