தமிழ் சினிமா நடிகர்களில் மன்சூர் அலிகான் கொஞ்சம் வித்தியாசமானவர். சில வருடங்களாகவே அரசுக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு போலவே இருக்கிறது. யாரையாவது எதிர்த்து பேசி வம்பில் மாட்டி கொள்கிறார் மன்சூர். சில நாட்களாக எந்த வம்பு தும்பிற்கும் செல்லாமல் அமைதியாக இவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை சூளைமேடுப் பகுதியில், பெரியார் பாதை அருகே நடிகர் மன்சூர் அலிகானுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 2,400 சதுர அடியை ஆக்கிரமித்து, இந்த வீட்டைக் கட்டியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.







