உலக உயிர்கள் அனைத்திற்கும் உணவு கிடைக்கும் பொருட்டு ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிசேகம் நடைபெறுகிறது.
உலகில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு சாதம் வடித்து அந்த சாதத்தை அவருக்கு அலங்காரமாக செய்து இருப்பார்கள்.
இன்று சிவன் கோவிலுக்கு சென்றால் அன்னாபிசேக வடிவத்தில் சிவனை காணலாம்.
இன்று கோவிலுக்கு சென்று உலக உயிர்கள் அனைத்திற்கும் உணவு கிடைக்க வேண்டும் எனக்கும் என் குடும்பத்திற்கும் தடையில்லாமல் உணவு கிடைக்க வேண்டும். அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள வேண்டும்.







