குடும்பத்தினர் கூட ஓட்டுப்போடவில்லை என்பது தவறு- ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்

குடும்பத்தினர் கூட ஓட்டுப்போடவில்லை என்பது தவறு- ஒரு ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர்

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த ஒன்றியத்தில் உள்ள குருடம்பாளையம்  ஊராட்சியில் 9வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டார். இவர் கடைசி இடத்தை பிடித்திருந்தார். இவர் வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து கூறுகையில் கார்த்திக்கின் குடும்ப உறுப்பினர்களே 5 பேர் அவர்களது ஓட்டு கூட கார்த்திக்கிற்கு விழவில்லை என மீடியாக்களால் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள கார்த்திக் நான் போட்டியிட்டது ஒன்பதாவது வார்டு. நான் இருப்பதோ 4வது வார்டு. என் குடும்ப உறுப்பினர்களும் அங்குதான் உள்ளனர் அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் 9வது வார்டில் ஓட்டுப்போட  முடியும்.

தவறான தகவலை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.