Connect with us

Entertainment

பிச்சை எடுப்பதற்காக விடுமுறை கேட்ட அரசு ஊழியர்

வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்குமார் யாதவ் என்ற பொறியாளர். விநோதமான காரணத்தை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எனது முன் ஜென்மம் குறித்த நினைவுகள் வந்திருக்கிறது. மகாபாரத கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் ஒருவனாக இருந்திருக்கிறேன். என்னுடைய நண்பன் நகுலனாக ஐதராபாத் எம்.பி. ஓவைசியும், சகுனியாக ஆர்.எஸ்.எஸ்  தலைவர் மோகன் பகவத்தும் இருந்திருக்கிறார்கள்.

ஆகவே மேற்கொண்டு எனது ஆன்மிகம் குறித்து தேடவும், என்னுடைய ஈகோவை அழிப்பதற்காக பிச்சை எடுக்கவும் விரும்புகிறேன். ஆகையால் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுப்பு அளித்து அனுமதியுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாருங்க:  புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை!

Entertainment

பேரன்களுடன் அண்ணாத்த படம் பார்த்த ரஜினி

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. தீபாவளி திருநாளில் வெளியாகும் இப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு (27.10.2021) அண்ணாத்த படத்தை பார்த்துள்ளார். படம் முடிந்த பிறகு ரஜினியின் பேரன் கட்டிப்பிடித்ததை நெகிழ்ச்சியாக ரஜினிகாந்த் Hoote சமூக வலைதளம் மூலம் குரல் பதிவாக பகிர்ந்துள்ளார். முழு குரல் பதிவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  நடிகை கவிதா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம்
Continue Reading

Entertainment

பாலா பற்றி திடீரென வாய் மலர்ந்த சூர்யா

நடிகர் சூர்யா நடிகர் சிவக்குமாரின் வாரிசு என்றாலும் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. சூர்யாவும் என்னென்னவோ நடித்து பார்த்தார். விக்ரம் பட்ட கஷ்டம் போல சூர்யாவும் படாத கஷ்டமில்லை இருந்தாலும் சினிமாவில் முன்னேற்றமில்லாமல் இருந்தார்.

இயக்குனர் பாலா சேது முடித்து அந்த வெற்றிக்களிப்பில் இருந்த கையோடு அடுத்த படமாக நந்தாவை துவக்கினார். இதில் சூர்யாவுக்கு சிறப்பான வேடம் கொடுத்தார்.

இந்த படத்தின் மூலம் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. அடுத்த மாதம் 14ம் தேதியுடன் சினிமாவின் தன் வெற்றியை சூர்யா துவக்கி 20 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில் என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என சூர்யா கூறியுள்ளார்.

பாருங்க:  நடிகை கவிதா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம்
Continue Reading

Entertainment

புஷ்பா படத்தின் சாமி சாமி லிரிக்கல் வீடியோ

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புஷ்பா படத்தின் சாமி சாமி என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  மோசமாகும் இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை – ஐ சி யூ வில் அனுமதி!
Continue Reading

Trending