கடந்த 2018ல் வெளியான கலகலப்பு 2 சிவா மற்றும் ஜீவா இணைந்து நடித்திருந்தனர். தற்போது ஒரு சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் இருவரும் நடிக்கின்றனர். படத்தின் பெயர் கோல்மால். கன்னட இயக்குனர் பொன் குமரன் இப்படத்தை இயக்க இருக்கிறார்.
முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் நடிக்கவுள்ளனர். இந்த படத்தினை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்கின்றனர்.
பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது.







