பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் இன்சமாம் உல் ஹக். அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர் இவர். பேட்டை கையில் தூக்கினால் பேட் ஏதோ சாதாரண கொசு போல அதை கையாள்வார் வரும் பந்துகள் எல்லாமே பவுண்டரிக்கும் போகும் அப்படி ஒரு அதிரடி ஆட்டக்காரர் இவர்.
பல ரசிகர்களால் ஆலு( உருளைக்கிழங்கு) என செல்லமாகவும் கிண்டலாகவும் அழைக்கப்பட்டவர் இவர்.
இன்சமாம் உல் ஹக்குக்கு இன்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது இதனால் இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.







